Sunday, January 10, 2021

வைகோ எம்பியின் முயற்சியால், நைஜீரியாவில் இறந்த தமிழர் உடல் சென்னை வருகின்றது!

மதுரையைச் சேர்ந்த செந்தூர்வேலன், ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பால் ஒரு வாரத்திற்கு முன்பு இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை; எனவே, இங்கேயே இறுதிச் சடங்குகள் செய்து விடுகின்றோம் என, நைஜீரியத் தலைநகர் லாகோசில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர், உடலைப் பார்க்க வேண்டும்; இந்தியா கொண்டு வர வேண்டும் என, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். 

இது தொடர்பாக, அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், ஜனவரி 7 ஆம் நாள், வைகோ மின்அஞ்சல் கடிதங்கள் எழுதினார். அயல்உறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் உடன் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அதன்படி, விரைவான ஏற்பாடுகளை மேற்கொண்டு, செந்தூர்வேலன் உடல் இன்று (10.1.2021) மாலை ஐந்து மணிக்கு, சென்னை வான் ஊர்தி நிலையம் வந்து சேருகின்றது.  அவரது குடும்பத்தினர் திருச்சியில் வசிப்பதால், உடல் அடக்கம், நாளை திருச்சியில் நடைபெறுகின்றது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
10.01.2021

No comments:

Post a Comment