Monday, January 11, 2021

முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ எம்பி கைது!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ இனப்படுகொலைக்கு ஆதாரமாக இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணை சிங்கள பேரினவாத அரசு அகற்றியதற்கு கண்டனம் தெரிவிக்க இன்று 11-01-2021 மதிமுக தலைமையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைத்தும், மற்றும் தமிழீழ உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சென்னையிலுள்ள சிங்கள இலங்கை தூதரகரகத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

உடன் திமுக எம்பி இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு தோழர்.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாகிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, வன்னியரசு, தெகால்கான் பார்கவி, திருமுருகன் காந்தி, இயக்குனர் கெளதமன், புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்களும் ஏராலமான தமிழ் உணர்வாளர்களும், தமிழீழ ஆதரவாளர்களும் பங்கேற்றனர்

ஆர்ப்பாட்டத்தை முடித்து, இலங்கை சிங்கள தூதரகத்தை முற்றுகையிட தயாரான போது, தலைவர் வைகோ உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சூளை நெடுஞ்சாலை, சின்னமணி வள்ளியம்மாள் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.


No comments:

Post a Comment