Monday, June 28, 2021

கழக‌ தஞ்சை‌ பெருந்தூண் சாய்ந்தது! ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை இரங்கல்!

தஞ்சை‌ மதிமுக மாவட்ட செயலாளர் அண்ணன் கோ உதயகுமார் தஞ்சை அவர்கள் கடந்த 2 வாரங்களாக திருச்சியில்  இருதய சிகிச்சை எடுத்து வந்தார். அன்பு தலைவர் வைகோ MP அவர்கள் முயற்சியில் திருச்சி கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தரமான சிகிச்சையளித்தனர்.

விரைவில் நலமோடு வீடு திரும்புவார் என்று கழகத்தினர் இருந்த நிலையில் பேரிடியாக அவர் மறைவு இருக்கிறது.

ஒரே முறை பேசியிருக்கிறேன். அவரின் அன்பு கலந்த‌ வார்த்தைகள் கழக தொண்டன் என்றதும் அளவிட முடியாதது. வெளிநாட்டிலும் கழகத்தை பரப்புவது பெருமையாக இருக்கிறது என நெகிழ்ந்தார்.

திராவிட இயக்கத்திற்கு வேராக இவரும் இருந்திருக்கிறார். தஞ்சை மண்ணில் திராவிட இயக்கம் இருக்கும் வரை அண்ணன் உதயகுமார் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
28-06-2021

No comments:

Post a Comment