மதிமுக துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் அவர்கள் நினைவஞ்சலி இணைய கூட்டம் சவுதி தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
வெளிவேலை காரணமாக 3 மணிநேரம் நடந்த கூட்டத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு கொஞ்சம் கூடுதலாக மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது.
மாணவரணி செயலாளர் பால சசிகுமார் புகழுரை வழங்கி கொண்டிருந்தார்.
சகோ வல்லம் பசீர் போன்றோர் அடுத்தடுத்து பேசி முடித்து அண்ணன் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் பேசும்போது ஒரு செய்தி சொன்னார்.
அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்களுக்கு தெரிந்த நபர் விபத்தில் சிக்கி மருத்துவத்திற்காக அவரது குடும்பத்தார் அண்ணனிடம் தஞ்சை மருத்துவமனையில் நல்ல மருத்துவம் கொடுப்பார்களாம், ஆனால் பெரிய ஆட்கள் எதாவது சொன்னால் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள் என்று சொல்ல, அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்கள் நமது துணை பொதுச் செயலாளருக்கு உதவி கேட்க, அவரும் டீனிடம் பேசிவிட்டேன் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சிகிச்சை பெறும் நபரை சந்தித்து அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்களுக்கு போன் செய்து இவரிடம் பேசுங்க என்று சொன்னதை தமிழ்மாணிக்கம் அவர்கள், துரைபா அவர்களிடம் அண்ணே நீஙக் அங்கேயே போய்டீங்க என கேட்க அவர் இது நமது மதிமுக சொந்தம் சொன்னதல்லவா என்று சொன்னதாக சொல்லும்போது நெகிழ்ச்சியாகிவிட்டேன்.
ஆம் மதிமுகவினர் தன்னலம் கருதாமல் மதிமுகவினர் யாராவது அழைத்து அவருக்கு ஒரு பிரச்சினை சொன்னால் உடனே மதிமுககாரர் சொல்லிட்டார் என்று உடனே உதவி புரிகின்றனர்.
ல் கருதாது கழகத்திற்கு உழைத்த சோழ மண்டல தலைவன் துரைபா அவர்கள் புகழ் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்.
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை புகழஞ்சலி.
மைக்கேல் செல்வ குமார்
No comments:
Post a Comment