Thursday, June 3, 2021

கரம்பக்குடி ஒன்றியச் செயலாளர் சேதுமாதவன் மறைவு! வைகோ இரங்கல்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் கழகத் தூண்களுள் ஒருவரான கரம்பக்குடி ஒன்றியச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் சேதுமாதவன் அவர்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இன்று (03.06.2021) நண்பகலில் உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய சேதுமாதவன், நமது இயக்கம் தொடங்கிய நாள் முதல் நமக்கு அரணாகத் திகழ்ந்தார்.
மிக மிக அடக்கமானவர். அதிர்ந்து பேச மாட்டார். கழகப் பணிகளை முழுமையாகச் செய்வார். புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் சேதுமாதவன் வந்துவிட்டாரா? என்றுதான் கேட்பேன். இனி நான் யாரைக் கேட்பேன்?
பண்பாட்டுப் பெட்டகமாக, கழகத்திற்குப் படைக் கருவியாக இயங்கி வந்த சேதுமாதவன் மறைவு, புதுக்கோட்டை மாவட்டக் கழகத்திற்கு தாங்க முடியாத இழப்பு ஆகும். அவரது சகோதரர் பாஸ்கரிடம் பேசி, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். அதற்குள் காலம் அவரைப் பறித்துச் சென்று விட்டது.
அந்தக் குடும்பத்தின் கண்ணீரில் நான் பங்கேற்கின்றேன். அவரை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.06.2021

No comments:

Post a Comment