Friday, January 20, 2017

ஓமன் ஜல்லிகட்டு ஆதரவு போராட்டத்தில் மதிமுக இணையதள அணி உறுப்பினர்கள்!

கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழின உணர்வோடு, தமிழர் பண்பாட்டை, தமிழர் கலாச்சாரத்தை, தமிழர் அடையாளத்தை காக்கும் விதமாக இன்று 20-01-2017 காலை 10 மணி அளவில் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் ஒன்று கூடி எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது.

அரபு தேசம் என்பதால் இது போன்ற எழுச்சி போராட்டங்களுக்கு அனுமதி இல்லாததாலும், உள் அரங்கத்திலே உணர்வுமிக்க இளைஞர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

500 வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்ட அரங்கத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக 3000 பேருக்கு அதிகமாக தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கம் பெரிதாக இருந்ததாலும், ஓரளவு சமாளித்தாலும், கூட்டம் கட்டுக்கடங்காத காரணத்தால், தமிழின உணர்வாளர்கள் அரங்கத்தின் வெளியிலும் நின்றிருந்தனர்.

இதில் ஜல்லிகட்டு ஆதரவாக எழுச்சி முழக்கங்களையும், பீட்டாவுக்கு தடை செய்ய எதிர்ப்பு வீர முழக்கங்களையும் பெண்களும், இளைஞர்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்களும் முழங்கினார்கள்.

ஓமன் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 200 கிலோ மீட்டர், 300 கிலோ மீட்டர், 400 கிலோ மீட்டர், 500 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் தமிழர்கள் வந்து தமிழர் கலாச்சாரத்தை காக்க ஆதரவு முழக்கங்களை பதிவு செய்து இந்தியாவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வலியுறுத்தவும், பீட்டாவை தடை செய்யவும் திரண்டிருந்தது, தமிழர் ஒற்றுமையை அரபு தேசத்திலே நிலைநாட்டப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே!

இந்த போராட்டத்தில் ஓமன் மதிமுக இணையதள அணியின் மறுமலர்ச்சி மைக்கேல், கணேசன் ராஜேந்திரா, விஸ்வநாதன், ஞானசேகரன், கண்ணன், குமார், ஆல்பின், பிரேம் ஜாஸ்பர், பிரபு (சோஹார்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பாற்றினர்.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை நீக்கும் வரையும், வாடிவாசல் திறந்து காளைகள் ஓடி வந்து ஜல்லிகட்டு நடந்து காளைகளை வீரர்கள் தழுவி வீரத்தை வெளிப்படுத்தும் வரையிலும், மேலும் ஓவ்வொரு வருடமும் தமிழர் பாரம்பரியத்தை எந்த வித தங்கு தடையின்றி எந்த வித போராட்டமின்றி நடத்த நிரந்தர அனுமதி உத்தரவை தமிழக இந்திய அரசு தரும் வரை தாய் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் போராட்டத்தை கைவிட வேண்டாம் எனவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment