Wednesday, January 25, 2017

மதிமுக நடத்திய மொழிப் போர் தியாகிகள் கூட்டம்!

மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் இன்று 25-01-2017 மாலை தென்சென்னையில் சைதை பகுதியில், ஜாபர்கான் பேட்டை, கங்கை அம்மன் கோயில் திடலிலே நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மறுமலர்ச்சி மாணவர் மன்றம், மதிமுக மாணவரணி நிர்வாகிகள் உரையாற்றினார்கள். மதிமுக தலைவர்கள் சார்பாக டிஆர்ஆர் செங்குட்டுவன் உரையாற்றினார்.

மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை பற்றி பேருரையாற்றிய வைகோ அவர்கள், 1994 ஆண்டு ஜனவ்ரி 25 ல் ஜீவன் உள்ளிட்ட தம்பிமார்களை அனுப்பி, புதர்களை அகற்றி தாளமுத்து நடராசன் கல்லறைக்கு செல்கின்ற பாதையை செப்பனிட்டு நாங்கள் போய் மலர்கள் தூவி வீரவணக்கம் செய்த பிறகுதான் அனைவருமே தாளமுத்து நடராசன் கல்லறைக்கு வர ஆரம்பித்தார்கள்.

அண்ணா அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணா அவர்கள் பேசும்போது, துப்பாக்கி துண்டுகள் மார்பிலே சாயலாம். அப்படி பாய்கின்ற குண்டுகளால் பின்பக்கம் சாய்ந்துவிடாதீர்கள். முன்பக்கமாக விழுந்து மடிந்தாலும் நம்முடைய வீரம் நிலைநாட்டப்படும் என்று சொன்னார்.

அன்று நடந்த காங்கிரஸ் ஆட்சியிடம் உனிடம் போலீஸ் பட்டாளம் இருக்கலாம். இராணுவம் இருக்கலாம். துப்பாகிகள் இருக்கலாம். குண்டுகள் சீறி பாயலாம் ஆதால் குண்டுகள் தீர்ந்துவிடும், அலை அலையாய் தம்பிமார்கள் வருவார்கள் என குறிபிட்டார்.

மெரினா புரட்சி என்ற சொல்லை உபயோகப்படுத்தியவன் அடியேன் என எல்லோருக்கும் தெரியும். இந்த போராட்டத்தில் மாணவர்கள் ஜல்லிகட்டு வேண்டும் என முழங்கிய போது மெய் சிலிர்த்து போனேன்.

மாணவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் வருங்கால தமிழகம் மேலுள்ள கவலைகள் நீங்கிற்று. போராட்ட களத்தில் தாகத்தோடு இருந்தார்கள், பசியோடு இருந்தார்கள், தாயுள்ளத்தோடு இருந்தார்கள். மாணவர்கள் பசியோடு இருந்தார்கள், முறையாக ஒழுங்குப்பட்டுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எத்தனை போராட்ட களங்களை கண்டாலும், அந்த மாணவர்கள் கட்டுப்பாட்டோடு இருந்து தங்களையே கட்டுப்படுத்திக்கொண்டார்கள். இந்த போராட்டத்தை உலகமே பார்த்தது.

65 போராட்டத்தில் பக்தவட்சலம் முதல் மந்திரி. லட்சகணக்கான மாணவர்கள் இதே நாளில் புறப்பட்டு அடிவயிறு வலிக்க முழக்கமிட்டோம். கடற்கரை சாலைக்குள் நுளையும் போது காவல்துறை குண்டாதடி கொண்டு தாக்கி சின்னாபின்னமாக்கப்பட்டோம்.

முதலமைச்சரே இன்னும் ஜல்லிகட்டுக்கு தடைவந்தால் நிங்கள் பேசாமல் இருங்கள். போலீஸை விட்டு ஏவ கூடாது. ஜல்லிகட்டு தானாக நடக்கும். 

மாணவர் போராட்டத்தில் மாணவர்களை யார் குளப்பியது. யார் பின்னார் இருந்து இயக்கினார்கள். 

மாணவர்கள் போராடியது மாணவர்கள் உரிமை. அவர்களை காவல்துறை ஏன் அப்புறப்படுத்த வேண்டு. ஏன் தாக்க வேண்டும். வாகனம் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் தீ வைத்ததாக வீடியோ ஆதாரம் உலவுகிறது. அவர்களை சஸ்பன்ட் செய்தீர்களா கமிசினர் ஜார்ஜ் அவர்களே. அவர்கள் போலீஸ் இல்லையென்றால் சீருடையில் இருந்தது யார். அவர்கலை கைது செய்தீர்களா?

சர்க்காருக்கு கெட்ட பெயர் உண்டாக்க போலீஸ் செய்தீர்களா, இல்லை வேறு யாருமா? அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கைய பாதுகாக்க போராடி வரும் இயற்கை ஆர்வலர் முகிலனை சுற்றி நின்று தனியாக வைத்து அடித்திருக்கிறீர்களே... தமிழன் நாதியற்றவன் என நினைத்தீர்களா? வைகோ என்ற ஒருவன் இருக்கிறான் மறந்துவிடாதீர்கள். போலீஸை ஒழுங்குப்படுத்துங்கள்.

பிரதமரே நாடாளுமன்றம் கூடுகிறது. காட்சி பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்குங்கள். இதற்கு பிறகும் உச்சநீதிமன்ற நடத்த கூடாதென்றால் நடத்தி காட்டுவோம் தமிழ்நாட்டிலே.

தமிழ்நாட்டு சர்க்கார் ஒன்றும் செய்யகூடாது. உங்கள் ஆட்சியை கலைக்க முடியாது. அதனால் கவலை வேண்டாம். ஜல்லிகட்டு ஆயிரகணக்கான ஆண்டுகளாக எங்கல் உயிரில் கலந்தது. எனவே மாணவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் போக வேண்டாம். எங்கள் கட்சிக்கும் வர வேண்டாம். ஆனால் உங்களுக்கு இன்னல் நேர்ந்தால் நாங்கள் பாதுகாப்போம்.

அருமையான போராட்டத்தை நடத்தினீர்கள். உலகத்திலே இப்படி ஒரு மாணவர் போராட்டம் அறவழியில் அமைதியாக கட்டுப்பாட்டுடன் நடந்திருக்காது. எனவெ ஜல்லிக்கட்டு தடை மீண்டும் வந்தால் ஏழரை கோடி மக்களும் திரண்டு நின்று கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் என்பதை தெரிவித்து விடை பெறுகிறேன் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment