Sunday, September 3, 2017

12 ஊராட்சிகளை திருவேங்கடம் தாலுகாவில் நீடிக்க வலியுறுத்தி வைகோ தலைமையில் திருவேங்கடத்தில் ஆர்ப்பாட்டம்!

நெல்லை மாவட்டம் - குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் 1.முக்கூட்டுமலை, 2.நக்கலமுத்தன்பட்டி, 3.வடக்குப்பட்டி, 4.பிச்சைத் தலைவன்பட்டி, 5.இளையரசனேந்தல், 6.புளியங்குளம், 7.சித்திரம்பட்டி, 8.அப்பனேரி, 9.அய்யனேரி, 10.வெங்கடாசலபுரம், 11.ஜமீன்தேவர்குளம், 12.பிள்ளையார்நத்தம் ஆகிய 12 ஊராட்சி மன்றங்களை நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில்பட்டி தாலுகாவில் இணைப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்து செயல்பட்டபோதே அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 3 ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருவேங்கடத்தில் வைகோ தலைமையில் 12 ஊராட்சிகளும் திருவேங்கடம் வட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெற்றது.

அதில் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், மதிமுக தோழர்களும் பெருமளவில் பங்கேற்றார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment