Thursday, September 14, 2017

மலேசிய Bike Riders, தஞ்சை மாநாட்டு திடலில் வைகோவுடன் சந்திப்பு

நேற்று 13-09-2017 மும்பை சென்று தனது நண்பர் ராம் ஜெத்மலானியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இன்று 14-09-2017 காலை தஞ்சை மாநாட்டு திடலுக்கு வந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

இந்நிலையில், மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும் ஆறு தமிழர்கள் வைகோ அவர்களை தஞ்சை மாநாட்டு திடலில் சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

அப்பொழுது அவர்களை வாழ்த்தி பேசிய வைகோ அவர்கள், 


அன்பார்ந்த தோழர்களே, தமிழ் சகோதரர்களே!

மலேசிய நாட்டிலிருந்து, டத்தோ ஆனந்த் அவர்களும், அவரோடு சேர்ந்த 6 பேர் ஏறத்தாள் 15000 கிலோ மீட்டர் பயணித்து 5, 6 நாடுகளை சுற்றி வந்து, இந்தியாவிற்குள்ளும், டெல்லி, பம்பாய் வந்து, தமிழகத்திலும் எல்லா இடங்களையும் பார்த்து விட்டு, எங்கிருந்து புறப்பட்டு, படையெடுத்து சென்று மலேசியாவை வென்றானே ராஜேந்திர சோழன், அதே தஞ்சைக்கு வந்திருப்பதை எண்ணி, வானமே வரவேற்க, மேகங்களோடு காத்திருக்கிறது. இந்த பூமி வரவேற்க்கிறது. தமிழ் மக்கள் வரவேற்க்கிறார்கள். அவர்களோடு மேலும் 12 பேர் இந்த பயணத்திலே கலந்துகொண்டு வந்திருக்கிறார்களே, அவர்கள் அனைவருக்கும், தமிழ் சமுதாயம், தமிழ் குலம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. இப்படி வந்ததை போல தமிழனுக்கென்று ஒரு நாடு வேண்டும். தமிழனுக்கென்று ஒரு தேசம் வேண்டும். அந்த நிலமை நிச்சயமாக வரும்.

டத்தோ ஆனந்த், சுப்ரா, ஜாண், ஜேஷ் ராஜா, ராஜா, குமார் ஆகிய இந்த 6 Bike Riders-க்கும் எங்களுடைய மனம் நிறைந்த மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.

தமிழ்நாட்டிலே எல்லோரும், எல்லா கட்சிகளும் உங்களை வரவேற்ப்பார்கள். நீங்கள், எங்களால் சாதிக்க முடியும் என்று சாதித்திருக்கிறீர்கள். எவரெஸ்டிலே டென்சிங் போல 4 ஆண்டுகளாக திட்டமிட்டு உடல்நலத்தோடு வந்திருக்கிறார்கள். தொடர் பயணமும் உடல் நலத்தோடு இருந்து, அவர்கள் இல்லங்களுக்கு சென்று அந்த குடும்பங்கள் பெருமைப்படும். 

எங்களுக்கு என்ன மகிழ்ச்சியென்றால், பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாள் விழா மாநாட்டை நாளை 15-09-2017 நடத்த போகிறோம். அண்ணா அவர்கள் மலேசியாவிற்கு வந்த போது, நேருவுக்கு இல்லாத வரவேற்ப்பு அண்ணாவுக்கு இருந்தது என்று சொன்னார்கள். சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் வந்த போது லட்சகணக்கான மக்கள் திரண்டார்கள். 64 லே அண்ணா அவர்கள் இங்கே வந்தார்கள். இன்றைக்கு 53 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணாவின் பிறந்த நாள் மாநாட்டை நாங்கள் நடத்துகிற வேளையில் நீங்கள் இந்த மாநாட்டு பந்தல் அருகே வரகூடிய பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.

உங்கள் பயணம் வெற்றி பெறட்டும். மீண்டும் இன்னொரு 50000 கிலோமீட்டர் போகிற பயணத்திற்கும், நீங்கள் தயாராகி, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சுற்றி வந்து ஒரு சாதனையை படைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

நீங்கள் பூரண உடல்நலனோசு சென்று, நீங்கள் பெரிய சாதனை சாதித்துவிட்டீர்கள். உங்கள் வீடுகளிலே உங்கள் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். மொத்த தமிழகமும் உங்களை வரவேற்கிறது என்று நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் நன்றி வணக்கம்.

என தனது உரையை முடித்தார் வைகோ.

தொடர்ந்து அவர்களிடம் பேசும்போது, மலேசியா என்னை தடுத்தது. ஆனால் இப்போது மலேசியாவே என்னை தேடி வந்தது என தலைவர் வைகோ மகிழ்ச்சியடைந்தார்.

பின்னர் அவர்கள் BIKE ல் அமர்ந்து புகைப்படம் எடுத்தார். அவர்கள் புறப்பட ஆயத்தமாக கொடியசைத்து வைத்து பயணத்தை மீண்டும் தொடங்கி வைத்தார் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment