மதிமுக இணையதள தோழர் ஆட்டோ ராஜா அவர்கள் நேற்று 11-05-2020 மாலை பொழுதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது இறுதி சடங்கு இன்று 12-05-2020 நடந்தது. இறுதி ஊர்வலத்தில் கொரொனா ஊரடங்கிலும் பாதுகாப்புடன் அதிகமான மதிமுக இணையதள தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
கழக சார்பில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், சைதை சுப்பிரமணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் ஆவடி அந்தரிதாஸ், கழக முன்னோடிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் வீரவணக்க முழக்கம் எழுப்பி முடிந்ததும், கழகத்தையே முச்சாக கருதிய ஆட்டோராஜ் அவர்கள் இறுதி சடங்கு செலவிற்காக தலைவர் வைகோ கொடுத்த, ரூபாய் 25 ஆயிரம், மல்லை சத்யா அவர்கள் முலமாக ஆட்டோராஜ் அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment