தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குளக்கட்டாகுறிச்சி கிராமத்தில், ஏழ்மையான ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சாமுவேல் இளங்கோவன் கடந்த 11 மே ஆம் தேதி ஒமான் சலாலாவில் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.
இவரது உடலை கொண்டு வர உதவுமாறு, இவரது மருமகன் மணிகண்டன் தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் மூலம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு அவசர மின் அஞ்சல் கடிதம் அனுப்பி, உடலை கொண்டு வர உதவுமாறு வேண்டினார்.
ஓமனில் உள்ள கழக உறவுகளையும் தொடர்பு கொண்டு, தக்க ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் இறந்தவரது குடும்பத்தினருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்பட்ட துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல் இன்று 20.05.2020 மாலை ஒமான் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைகிறது.
உறவினர்கள் உடலைப் பெற சென்றுள்ளனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 20-05-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment