Thursday, May 21, 2020

ஓமான் சலாலாவில் மரணமடைந்த இளங்கோவன் உடல் வைகோ எம்பி முயற்சியால் நெல்லை குளக்கட்டா குறிச்சி வந்து சேர்ந்தது. மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் திமு.ராஜேந்திரன் நேரில் அஞ்சலி!

உடல் நலம் குன்றி குளக்கட்டா குறிச்சி இளங்கோவன் கடந்த மே 11 ஆம் நாள் ஓமானில்‌ சலாலா என்னுமிடத்தில் மரணமடைந்தார். அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் அவர்களை தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைத்தனர். இந்த செய்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, தலைவர் வைகோ அவர்கள் இந்திய வெளியுறவு துறைக்கு தொடர்பு கொண்டு இளங்கோவன்‌ உடலை மீட்க கோரிக்கை வைத்தார். வெளியுறவு துறை அமைச்சர் ஓமன் இந்திய எம்பசிக்கு தகவல் தெரிவித்து இளங்கோவன் உடல் விரைவில் இந்தியா வர ஏற்பாடுக்ளை செய்ய ஆணையிட்டார்.


அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின் இந்த‌ கொரொனா நெருக்கடியான நேரத்தில் வானூர்திகள் இல்லாததால் சலாலாவிலிருந்து இந்தியா வந்த சிறப்பு விமானத்தில் இளங்கோவன் உடல் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. 



சலாலாவிலிருந்து நேற்று மாலை புறப்பட்ட விமானம் இரவு 8.30 மணியளவில் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது.



இளங்கோவன் உடலை அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குளக்கட்டா குறிச்சிக்கு இன்று 21-05-2020  காலை 8.30 மணிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 



இளங்கோவன் உடலை கண்டு‌, மகள்களும், மனைவியும் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்தியது.



தென்காசி மதிமுக மாவட்டக் கழகத்தின் சார்பில், இளங்கோவன் உடலை ஊருக்கு கொண்டு வர முழு முயற்சி எடுத்து குடும்பத்திற்கு ஆதரவாக இருந்த, மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் அவர்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.



நிகழ்வில், முன்னாள் சேர்மன் விசுவாமித்திரன், குருவிகுளம் தெற்கு ஒ.செ. இராசாராம் பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இராஜகோபால் கிளைச் செயலாளர் ராஜ் பங்கேற்றனர்.



இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்ப த் தா ரு க்கு ஆழ்ந்த இரங்கல்.



மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment