கேள்வி எண் 684
கீழ்காணும் கேள்விகளுக்கு, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா?
(அ) புதிய போக்குவரத்துக் கொள்கை வரையும் திட்டம் அரசின் ஆய்வில் இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
(இ) எண்ணெய்க்கு மாற்றாக, அழுத்தப்பட்ட இயற்கை எரிகாற்று, நீர்ம எரிகாற்று மற்றும் உயிரி எரிபொருள்கள் பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றதா?
(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
(உ) மேற்கண்ட எரிபொருள்களை நிரப்புவதற்கு, நாடு முழுமையும் புதிய விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
விசைப்பொறி ஊர்திகளுக்கான திருத்தச் சட்டம் 2019 (The Motor Vehicles (Amendment) இன்படி, நாடாளுமன்றத்தில் இசைவைப் பெற்று, 2019 ஆகஸ்ட் 9 ஆம் நாள் அரசு செய்தி இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் கருத்துகளைப் பெற்று, புதிய கொள்கையை வகுத்திட, இச்சட்டம் வகை செய்கின்றது.
இ,ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
ஆம். கேசோலின், அடர் எண்ணெய், இரட்டை எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட விசை ஊர்திகளுக்கான உமிழ்வுத் தரக் கட்டுப்பாடுகளை, அமைச்சகம் அறிவித்து இருக்கின்றது.
1989 ஆம் ஆண்டு விசைப்பொறி ஊர்திகளுக்கான திருத்தச் சட்டத்தின், பிரிவின்படி, அழுத்தப்பட்ட உயிரி எரிகாற்று, நீர்ம எரிகாற்றுகளால் இயக்கப்படும் ஊர்திகளுக்கு 115 (ஆ), எத்தனால் 115 (உ), உயிரி அடர் எண்ணெய் 115 (ஊ) மற்றும் மெத்தனால் 115 (ஏ) ஆகிய புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கேள்வி உ வுக்கான விளக்கம்:
அமைச்சகம் வகுத்துள்ள உமிழ்வுத்தரக் கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில், அழுத்தப்பட்ட உயிரி எரிகாற்று, உயிரி எரிகாற்றுகள் விற்பனை நிலையங்களைத் திறக்க வேண்டியது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுத்துறையின் (Ministry of Petroleum) பொறுப்பு ஆகும்.
பழமையான ஊர்திகளைப் பாதுகாக்க ஊக்கத்தொகை வழங்கப்படுமா?
வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்
கேள்வி எண்: 1256
(அ) ஐம்பது ஆண்டுகள் பழமையான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த ஊர்திகளைப் பாதுகாப்பதற்காக, அரசு விதிமுறைகள் வகுத்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்
(இ)இல்லை என்றால், அத்தகைய விதிமுறைகள் வகுக்கின்ற திட்டம் உள்ளதா? எப்போது?
(ஈ) ஊர்திகளைப் பாதுகாக்க, அரசு ஏதேனும் ஊக்கத்தொகை வழங்குமா?
அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
இது தொடர்பாக, போக்குவரத்து அமைச்சகம், பழமையான ஊர்திகள் வரைமுறை ஆணை 2019 (Regulation of Vintage Motor Vehicles Order 2019) ஒரு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கேள்வி ஈ க்கான விளக்கம்:
பழமையான ஊர்திகளைப் பாதுகாப்பதற்காக, ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் இல்லை என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கயில் 12-03-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment