தீவுத்திடல் சக்கரவர்த்தி கடந்த 2 ஆம் தேதி, தான் பணி பார்க்கும் இடத்தில் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டு எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இப்போது வீடு திரும்பியிருக்கிறார்.
அவருக்கு மதிமுக இணையதள தோழர்கள் மனமுவந்து மருத்துவ செலவுக்காக தங்களால் இயன்ற நிதியை திரட்டி 10-03-2020 அன்று மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ அவர்கள் இல்லத்தில் வைத்து தீவுத்திடல் சக்கரவர்த்தி அவர்களின் குடும்பத்தாரிடம் மதிமுக இணையதள தோழர்கள் சார்பாக ரூபாய்1,00,000/- நிதி வைகோ அவர்களால் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் திரு.சு.ஜீவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிதி உதவி அளித்த இணையதள தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
No comments:
Post a Comment