கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்ற ஈரான் நாட்டில் சிக்கி இருக்கின்ற இந்திய மீனவர்கள் நிலை குறித்து, அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
இன்று (11.03.2020) பிற்பகல், மாநிலங்கள் அவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுந்து, மூன்று நாள்களுக்கு மேல், மீனவர்களுக்குப் போதிய உணவும், தண்ணீரும் கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவித்து, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்துக் கேட்டார்.
உறுப்பினரின் கவலையைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர், மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகக் கூறினார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 11-03-2020 அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment