கீழ்காணும் கேள்விகளுக்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க விசைத்துறை அமைச்சர் (Ministry of New and Renewable Energy), கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா?
(அ) 2019-20 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கத்திற்கான இலக்கு எவ்வளவு?
(ஆ) அந்த இலக்கில், ஏதேனும் பற்றாக்குறை ஏற்படுமா? அதற்கான காரணங்கள் என்ன?
(இ) கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுமையும், குறிப்பாகத் தமிழகத்தில், அரசு மேற்கொண்ட புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கத்திற்கான திட்டங்கள் குறித்த விவரங்களைத் தருக.
துறையின் இணை அமைச்சர் ஆர்.கே. சிங் விளக்கம்:
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்படிக்கையின்படி, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட ஒரு இலக்கை அடைவதில், இந்தியா ஒரு உறுதி பூண்டு இருக்கின்றது. அதன்படி, 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில், புதைபடிவ எரிபொருள்களை 40 விழுக்காடு குறைக்கவும், மாற்றாக, புதிய விசை ஆக்க வழிகளைக் கையாளவும் இலக்கு குறிக்கப்பட்டு உள்ளது.
அந்த இலக்கை எட்டுவதற்கு, 2022 ஆம் ஆண்டுக்குள், 175 ஜிகா வாட், புதுப்பித்தக்க விசை ஆக்கவும்; கதிர்மின்விசை 100 ஜிகாவாட், காற்றில் இருந்து 60 ஜிகா வாட், உயிரி எரிபொருள் 10 ஜிகா வாட், 5 ஜிகா வாட் சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களின் வழியாகப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த இலக்கை அடைவதில், அமைச்சகம், உறுதியான நம்பிக்கை கொண்டு இருக்கின்றது.
2016 ஏப்ரல் முதல் 2020 ஜனவரி 31 வரை, கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு உட்பட, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 86.32 ஜிகாவாட் மின்விசை கூடுதலாக உருவாக்கப்படுகின்றது. அதுகுறித்த விரிவான பட்டியல், இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 9-3-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment