கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கே இருக்கின்ற இந்திய மீனவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் நாடு திரும்புவதற்கு, வான்ஊர்தி அல்லது கப்பலை அனுப்புமாறு, இந்திய அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள்.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் உடனே திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அயல் உறவுத்துறை, வைகோவுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதி உள்ளது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 3-3-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment