ஈரானில் சிக்கி உள்ள இந்திய மீனவர்களை மீட்பது குறித்து, மார்ச் 2 ஆம் நாள், இந்திய அயல்உறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கர் அவர்களுக்கு மின்அஞ்சல் கடிதம் எழுதி இருந்தீர்கள்,
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகமும், பண்டார் அப்பாசில் உள்ள துணைத் தூதரகமும், ஈரானின் புசேர் மாநிலத்தில் அசலுயே நகரிலும், ஹொர்மோஸ்கன் மாநிலத்தில் கிஷ் தீவுகள் மற்றும் சிருயேவிலும் உள்ள இந்திய மீனவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றன.
நாங்கள் அறிந்த அளவில், இந்திய மீனவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றார்கள்; அவர்களுக்கு கொவிட் 19 நோய்த் தொற்று எதுவும் இல்லை. இருப்பினும், இங்கே இருக்கின்ற வரையிலும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பண்டார் அப்பாசில் உள்ள இந்தியத் தூதர், கிஷ் தீவில் உள்ள அனைத்து மீனவர்களையும், மார்ச் 3 ஆம் நாள் நேரில் சந்தித்தார். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வான் ஊர்திப் போக்குவரத்தை மீளவும் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக அவர் உறுதி கூறினார்.
Reference email dated 2 March 2020 from Shri. Vaiko, Member of Parliament, Rajay Sabha to Dr. Subrahmanyam Jaishankar, External Affairs Minister regarding Indian fishermen stranded in Iran.
2. The Embassy of India, Tehran and our Consulate in Bandar Abbas is in constant touch with the Indian fishermen stranded in Iran in Bushehr province (in the city of Asaluyeh) and Hormozgan province (in Kish island and Chiruyeh).
As per our enquiry, the fishermen are in good health and are not infected with COVID-19. They have been advised to follow necessary precautions during their stay here.
3. Our Consul in Bandare Abbas has visited all fishermen at Kish island on 03 March 2020. He has assured that of the proactive steps being undertaken by the Mission and the Government to resume commercial flights between India and Iran at the earliest.
Regards,
Embassy of India, Tehran
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
07.03.2020
No comments:
Post a Comment