Saturday, April 1, 2023

சித்துராஜபுரம் முதல் நிலை ஊராட்சி - பயணியர் நிழற்குடை திறப்பு விழா!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், சித்துராஜபுரம் முதல் நிலை கிராம ஊராட்சியில் பயணிகள் நிழற்குடையினை தலைவர் வைகோ எம். பி., அவர்களின் நிதியில் இருந்து கட்டப் பட்டது. இன்று (01.04.2023) மாலை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.

சிவகாசி ஒன்றிய குழு தலைவர் வி.முத்துலட்சுமி விவேகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சித்துராஜபுரம் முதல் நிலை கிராம ஊராட்சித் தலைவர் எஸ்.லீலாவதி ஆர்.எஸ்.சுப்புராஜ், சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், சித்துராஜபுரம் உதயசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி உதயசங்கர், ராஜம்மாள் சுப்புராஜ், ஊராட்சி துணைத் தலைவர் காளிமுத்து, ஊராட்சி செயலர் அருள்ராஜ், மாவட்ட பொருளாளர் க. விநாயக மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாப்பட்டி ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜபாளையம் கிழக்கு- வில்லிசை மனோகரன், சிவகாசி தெற்கு- கணேசன், சிவகாசி மத்தி - பங்காருசாமி, சாத்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன், சாத்தூர் மேற்கு- பாலகிருஷ்ணன், சிவகாசி வடக்கு சந்திரபோஸ், சிவகாசி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், குருவிக்குளம் ராஜகோபால், கனகராஜ்,எம்.எல்.எப்.பரசுராமன், மாணவர் அணி பகவதி, இணையதள மண்டல பொறுப்பாளர் மால்குடி ராஜா, ரங்கசாமி, பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
01.04.2023.

No comments:

Post a Comment