Tuesday, April 11, 2023

மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் இப்தார் நிகழ்வு-வைகோ MP பங்கேற்பு!

மதிமுக சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மறுமலர்ச்சி திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுடன் இஃப்தார் நோன்பு திறந்தனர்.


இதில் பேசிய தலைவர் வைகோ அவர்கள், இஸ்லாம் மக்களை தற்போது மதவாத சக்திகள் எவ்வளவு துன்பப்படுத்த முடியுமோ அவ்வளவு துன்பப்படுத்தப்படுகிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் மதிமுக துணை பொது செயலாளர் தி.மு. ராஜேந்திரன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் செந்திலதிபன்,மாவட்டச் செயலாளர் ஜீவன்,டி சி ராஜேந்திரன், கழககுமார், சுப்பிரமணியன், மாவை மகேந்திரன் ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹையா, துறைமுகம் பகுதி செயலாளர் நாசர்,எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட கழகத்தின் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment