நினைவில் வாழும் மாநில இளைஞரணி துணை செயலாளர் D.ஹரி (எ) கௌரி சங்கர் அவர்களது குடும்பத்திற்கு நிதி வழங்கும் நிகழ்வு தலைமை அலுவலகம் தாயகத்தில் நேற்று 11.04.2023 நடைபெற்றது.
மதிமுக கண்மணிகள் 4,12,708 (நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 708 ) ரூபாய் கொடையளித்தார்கள்.
ஹரி மகன் ஹர்ஷ் பெயரில் பத்தாண்டுகள் வைப்பு தொகையாக ரூபாய் இரண்டு லட்சமும், அவரது மனைவி பெயரில் ரூபாய் இரண்டு லட்சமும் டெபாசிட் செய்வதற்கு அவர்களது பெயரில் காசோலையாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் டி.சி.இராசேந்திரன்,தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே. கழககுமார் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை.மகேந்திரன்,திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூவை மு.பாபு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனி,மாநில இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி, கழக தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர்.
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமை பங்கேற்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியை வழங்கினார்.
No comments:
Post a Comment