Thursday, March 2, 2017

மதிமுக ஊடக விவாத குழு உறுப்பினர் தீபன் திருமணத்தில் வைகோ!

மதிமுக இணையதள அணியில் சிறப்பாக வரலாற்று நிகழ்வுகளை அடிபிறளாமல் எடுத்து வைக்கும் வார்த்தைகளுக்கு சொந்தகாரர், இணையதள அணியின் கருவூலம், மதிமுக ஊடக விவாத குழு உறுப்பினர் தீபன் அவர்களின் திருமணம் இன்று 02-03-2017 காலை 9 மணி அளவில் உடுமலைபேட்டையில் போடிபட்டி கருணா கலையரங்கத்தில் நடந்தது.

இந்த திருமணத்தை மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையேற்க்க, திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் வரவேற்ப்புரையாற்றினார்.

மணமக்களுக்கு கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து திருக்குறள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது பேசிய வைகோ அவர்கள், மணமகன் தீபனும் திலீபனும் இரட்டையர்களாக பிறந்தவர்கள், ஒரே கருத்தோடு, ஒரே அன்போடு, ஒரே பாசத்தோடு அபூர்வ சகோதரர்களாக இருக்கிறார்கள். 

மாப்பிள்ளை அப்பாவுக்கு பதிலாக நான் நன்றி சொல்றேன் என்றார். அதற்கு நான் சரி என்றேன். பின்னர் கருணாகரன் என்றதும் இலங்கை கருணா வந்துட்டார் என இந்த கருணாகரன் அதிர்ச்சியாக, நான் உங்களைதான் கூப்பிடுகிறார் என நம்ம கருணாகரனை வந்து வாழ்த்த சொன்னேன்.

பின்னர் மாப்பிளை வாழ்த்துகிறார். மணமகள் சங்கீதா, தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்ட கணவன் வாழ்த்துகிறார் என்று ஆசையாக கேட்டுக்கொண்டிருந்தார். அதில் ஒரு துண்டு சீட்டை கொடுத்தால், பேசிக்கொண்டிருக்கிற பேச்சாளனுக்கு ஒரு துண்டு சீட்டுகொடுத்தால், அதை விட வேறு தண்டனை ஏதுவும் கிடையாது.

இந்த தம்பி பேச பேச, எனக்கு என்ன சந்தோசம் தெரியுமா? இவ்வளவு நினைவாற்றல் இருக்கிறது. இந்த தம்பியை நான் பயன்படுத்தலையே. இந்த இயக்கத்தில் இணையதள நண்பர்களுக்கு சொல்கிறேன். தீபன் உலகெல்லாம் இருக்கும் இணையதள நண்பர்களை பாச நண்பர்களாக பெற்றிருக்கிறான்.

இரண்டு நாட்களுக்கு முன் பக்ரைன் பாரதி தமிழ் சங்க தலைவர் வல்லம் பசீர் அழைத்தார். அதற்கு முன் மருத்துவர் ரோஹையா அழைத்தார். வல்லம் பசீர் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறார். உங்களுக்கு ஏதோ அவர் மேல் கோபம் போல இருக்கு! ஏன் என்றவுடன், அவர் வந்து, தீபன் திருமணத்திற்காக விளம்பரத்திற்கு சங்கொலிக்கு கொடுத்தாராம். அது சங்கொலியில் இந்த வாரம் வரலயாம். என் மேல வருத்தாமக இருக்காராம் என்றதும். நானே அலைபேசியில் பிரசாந்திடம் சொல்லி போன் போட்டேன்.

வல்லம் பசீர், சீமை கருவேலம் மரங்களை அகற்றுவதற்கு பெற்று தந்த தீர்ப்புக்காக, என்னை பாராட்டி, "தமிழ்நாட்டில் தன்னலமின்றி போராடுகிற ஒப்பற்ற போராளியும், தியாகியும், எங்கள் தலைவர் வைகோ, மற்றவர்கள் தற்குறிகள் என முகநூலில் பதிவிட்டுவிட்டிருக்கிறார். 

இதை பார்த்த திமுகவினர், ஒரு லைக் போட்டா 300 ரூபாய், வைகோவை அட்டாக் பணினால் 700 ரூபாய் என ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். என்னால் பலபேருக்கு காசு கிடைக்கிறது பற்றி எனக்கு ரொம்ப சந்தோசம்.

வல்லம் பசீரை குதறி எடுத்துவிட்டார்கள் ஒரு 3 வாரமாக. 1500 பேர் எதிர்ப்பு போட்டிருக்கிறார்கள். நான் சொன்னேன் வல்லம் பசீருக்கு, உனக்கு ஏகப்பட்ட செல்வாக்குப்பா. திமுககாரங்க என்னை கூட மறந்துட்டாங்க. உன் பெயரைதான் போட்டு காச்சி எடுத்துட்டுருக்காங்க. என்ன வருத்தம்ணு கேட்டேன். நானும் தாயகம் சுரேஷும் விளம்பரம் கொடுத்தோம். சங்கொலியில் போடல என்றதும். தாயகம் சுரேஷிடமும் சொல்லு, இடம் இல்லாததால் போடல, கடல்கடத்து வாழும் உங்களை போன்றவர்கள் கழகத்திற்காக எவ்வளவு பாடுபடுகிறீர்கள் என்பதை நானறிவேன். தாயகம் சுரேஷ் ரொம்ப கோவகாரன். எனவே அவரிடமும் சொல்லிவிடு. நான் கல்யாண வீட்டில் போய் உங்கள் 2 பேர் பெயரையும் சொல்லிவிடுகிறேன் என்றேன். 

இங்கே மதிமுக எப்படி போராதியது. நான் எங்கெல்லாம் போராடினேன் என்பதை தேதி வாரியாக, அப்படி நினைவாற்றலோடு சொன்னபோது எனக்கு மகிழ்ச்சி, எனிமே எனக்கு சந்தேகம் வந்தா, சங்கொலியை புரட்ட வேண்டாம், உடனே தீபனுக்கு அலைபேசியில் அடித்தால் போதும், தேதி வாரியாக சொல்லகூடிய இந்த ஆற்றலை பார்க்கிறபொழுது, இந்த ஆற்றலுள்ள இளைஞர்கள் இயக்கத்திற்கு பணியாற்ற முன்வரவேண்டும். இவர்களுக்கு மூத்த கழகத்தினர் வாய்ப்பளிக்க வேண்டும். ஒரு பொதுக் கூட்டமென்றால் இப்படிபட்ட தம்பிகளை 10 நிமிடம் 15 நிமிடம் பேச் அனுமதிக்க வேண்டும்.

அப்போதுதான் மக்களிடத்தில் போய் சேரும். அவர்களி கூர் சிந்தனை திறனால், அவர்கள் சொல்வதை கேட்பார்கள். அப்படிபட்ட இளைஞர்கள் மாணவர்கள் எழுச்சி வரவேண்டுமென்று நான் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருந்தேன். ஊர் ஊராக சென்று ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் சென்று ஈழத்தில் இனப்படுகொலை இதயத்தில் ரத்தம் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் சிடிக்கள் கட்சி வேட்டி கட்டாமல் கொண்டு கொடுத்தேன். இப்போது ஜல்லிகட்டுக்காக மெரினாவில் புரட்சி வெடித்தது. அதற்கு நான்தான் மெரினா புரட்சி என பெயரிட்டேன்.

நெடுவாசல் சென்றிருந்தேன். மாவட்ட செயலாளர் அருமையான ஏற்ப்பாடு செய்திருந்தார். துணை பொதுச் செயலாளர் துரைபாலகிருஷ்ணன் இருந்தார். அரசியல்வாதிகளெல்லாம் இங்கே வரகூடாது என அதற்கு முன்பு பேசியிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். நான் பேச ஆரம்பித்தேன். 

2.5 வருடம் முன்பு இதே வீதியில் வந்து நான் பேசினேன். அன்றக்கு அனைத்து கட்சியினரும் எனக்கு கதர் அணிவித்தார்கள். திமுக அதிமுக செயலாளர்கள் ஒன்றாக கைத்தறி அணிவித்தது அப்போதுதான். 

எத ஊரிலும் கட்சி கொடி கட்டாமல, வேனில் கட்சி கொடி கட்டாமல் வந்து மீத்தேன் தீமையை எடுத்து மக்களுக்கு சொன்னேன். இதே முல்லை பெரியாறு விசயமாக ஊர் ஊராக சென்ற போது எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் என்றேன்.

தஞ்சையில் மீத்தேன் எதிர்ப்பு முதல் கூட்டத்தில் சொன்னேன், மீறி மீத்தேனை கொண்டு வந்தால் இந்திரங்களை உடைப்போம். முதல் ஆளாக சம்மட்டியோடு வருவேன். இன்றைய இரவுக்குள் காலிசெய்து போகாவிட்டால் நடக்குறது வேறண்ணு சொன்ன 4 நாளிகையில் வந்து அலுவலகங்களை காலி செய்து போய்விட்டார்கள் என அடுத்த நாள் தினமலரில் வைகோ எச்சரிக்கை, இரவோடு இரவாக மீத்தேன் அலுவலகங்களை காலி செய்து ஓடிவிட்டார்கள் என செய்தி வந்தது. 

20 வருடமாக ஸ்டெர்லைட் விசயமாக போராடுகிறேன். உயர்நீதிமன்றத்தில் வெற்றிபெற்றேன். உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகிறேன். எந்த அபாயத்திற்கு முதல் எச்சரிக்கை மணி அடிப்பது மதிமுக மட்டும்தான். 

சீமைகருவேலம் மரத்தை ஒழிப்பது பற்றி 2.5 வருடமாக போராடிக்கொண்டிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளை சிமைகருவேலம் மர முள் குத்தினால் விசம். சாப்பிட்ட ஆடுமாடுகள் சினைபிடிக்காது. 75% தமிழ்நாட்டை சீமைகருவேலமரம் ஆக்கிரமித்துவிட்டது. இதை தூரோடு ஜேசிபி அகற்ற வேண்டும். முளை விட்டால் 2 விரல் கொண்டு புடிங்கி போட்டுவிடுங்கள். இதை அரசாங்கமே தமிழக சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம் தீர்ப்பளித்துவிட்டார். நானே போய் கோடாலி அருவாளோடு போய் வெட்டினேன். 

நீதிபதியே சொன்னார். நீங்கள் இந்த சமூகத்திற்கே சேவை செய்கிறீர்கள். இல்லை இந்த தேசத்திற்கே சேவை செய்கிறீர்கள் என்று. யாரையும் பாராட்டாத நீதியரசர் செல்வம் நேர்மையான நீதிபதி என்னை பாராட்டி சொன்னார்.

மதுக்கடையை எதிர்த்து 3000 கிலோ மீட்டர் நடந்தேன். என் தாய் மதுவிற்கு எதிராக என்னிடமோ என் தம்பியிடமோ சொல்லாமல் உண்ணாவிரதம் இருந்து 100 வது நாளில் இறந்து போனார்.

மதுக்கடையை அகற்ற பஞ்சாயத்து தலைவர் என் தம்பி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். பஞ்சாயத்தில் மதுக்கடையை அடைக்க தீர்மானம் போட்டார்கல். அந்த தீர்மானம் செல்லாது என தமிழக அரசு வழக்காடியது. அந்த தீர்ப்பில், பஞ்சாயத்தில் தீர்மானம் உயிருக்கு ஆபத்து ஏற்ப்படுமானால், பெரும் கலவரத்திற்கு வழிவகுக்குமானால், அந்த தீர்மானத்தை ரத்து செய்யலாம் என சட்டத்தில் உள்ளது. எனவே கலக்டர் ஆர்டர் நான் நிராகரித்து, நாங்கள் நிரந்தரமாக மூடுகிறோம் என நீதிபதி நாகமுத்து சொன்னார்.

கணவனும் மனைவியும் ஈருடல் ஓருயிர்தான் உங்கள் இரண்டு பேருக்கும். மதுவிலக்கு நடைபயணம் வந்த போது தீபன் வீட்டில்தான், புலவர் பழனிசாமி வீட்டில்தான் இரவில் தங்கினேன்.

அந்த தீபனும், திலீபனும் விடுதலைபுலிகள் உள்ள இயக்கத்தில் உள்ள பெயர்கள்தான். உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். 

இந்த இனிய திருமண நிகழ்வில் நீங்கள் அனைவரும் அமைதியாக இருந்து திருமணத்தில் கேட்கிறீர்கள் என்றால் பழனிசாமி குடும்பத்தால்தான்.

உங்கள் இல்லறம் நல்லறமாக இருக்கும். பெற்றோம் பெருமைபடும் விதத்தில் இருக்கும். 6 மாதத்திற்கு கட்சியில் அதிக வேலைகளில் அலையகூடாது. 6 மாதத்திற்கு இல்லறம் நடத்துங்கள். இணையதளத்து நிகழ்வுகளுக்கெல்லாம் கூடாது. 6 மாதகாலம் தேநிலவு காலம். உங்கள் இல்லறம் வாழ்க வளர்க என் வாழ்தினார் வைகோ.

ஓமன் இணையதள அணி சார்பிலும் மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment