Tuesday, March 7, 2017

கேரள மாநிலத்திற்கும் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்தைக் கேரள அரசு எதிர்க்க வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வைகோ நேரில் வேண்டுகோள்!

கேரள மாநிலத்திற்கும் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்தைக் கேரள அரசு எதிர்க்க வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வைகோ நேரில் வேண்டுகோள்!

அன்புள்ள திரு பினராயி விஜயன் அவர்களுக்கு, வணக்கம்.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமைய இருக்கின்ற நியூட்ரினோ வானிலை ஆய்வுக்கூடம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏற்படுத்த இருக்கின்ற சுற்றுப் புறச் சூழல் சீரழிவுகளையும், அதனால் இடுக்கி அணைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். 

இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை, நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகில் உள்ள சிங்கhரா என்ற பகுதியில் அமைப்பதென முதலில் திட்டம் வகுத்தார்கள். ஆனால் அந்த இடம் முதுமலை புலிகள் கhப்பகப் பகுதிக்குள், பாதுகாக்கப்பட்ட இயற்கை மண்டலத்திற்குள் அமைந்து இருப்பதாலும், யானைகளின் வழித்தடத்தில் குறுக்கிடுவதாலும் இந்திய அரசு அந்த இடத்தைக் கைவிட்டது. 

அதன்பின்னர், இந்திய அணுவிசைத் துறை, தேனி மாவட்டம் பொட்டிப்புரம் மலைப்பகுதியைத் தெரிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கhக இந்திய அரசு 1500 கோடி ரூபாயை ஒதுக்கியது. 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அந்த ஆணையில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டுமெனத் தெரிவித்து இருந்தது.


உலகிலேயே பூமியைக் குடைந்து அமைக்கப்படுகின்ற மிகப்பெரிய ஆய்வுக்கூடம் இதுதான். அதற்கhக அவர்கள் குடைய இருக்கின்ற சுருளி பகுதி, 35 ஆம் எண் நில நடுக்க வளையத்திற்குள் இடம் பெற்று இருக்கின்றது. இந்த இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றுக்குள், பெரியாறு, வைகை, வைப்பார் ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. பெரியாறுக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான அணைகளுள் ஒன்றான இடுக்கி அணை, வெறும் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளே இருக்கின்றது. 110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை, 50 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கின்றது. இந்த இரண்டு அணைகளிலும் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைவதற்கு ஆயிரம் மீட்டர் கனமுள்ள கருங்கல் பாறை தேவை. அதற்கhக அவர்கள் தேர்வு செய்து இருக்கின்ற இந்தப் பகுதியில் இலட்சக்கணக்கhன மக்கள் வசிக்கின்றார்கள்; அணைக்கட்டுகள் அமைந்து இருக்கின்றன; பெருமளவில் விவசாயம் நடைபெறுகின்றது. இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு, கhவல்துறையினரைப் பெருமளவில் குவித்து வைத்துக்கொண்டு, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்றைப் பெயரளவில் நடத்தி இருக்கின்றார்கள்.

நியூட்ரினோ திட்டத்தில் பாதுகhப்புக் குறைபாடுகள் நிறைய உள்ளன. திட்டத்திற்கான முழு விவர அறிக்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை. பூமிக்கடியில் பாறையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, அந்தப் பகுதி முழுமையும் உள்ள நீராதாரங்கள் பாதிக்கப்படும். அதற்கhகப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தால், நிலத்தடி நீர் நஞ்சாகும். நீண்ட சுரங்கம் குடைவதால், ஆறுகளின் நீரோட்டம் பாதிக்கப்படும். நில நடுக்கம், மண் சரிவுகள் ஏற்படக் கூடும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்ற 40 விழுக்கhடு பகுதி கேரள மாநில எல்லைக்குள் வருகின்றது. ஆனால், கேரள அரசின் அனுமதியைப் பெறவும் இல்லை; கேரள மாநில மக்களிடம் கருத்துக் கேட்கவும் இல்லை.

இத்தாலி நாட்டில் கிரான் சாஸ்சோ என்ற இடத்தில், 1400 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பல அமைப்புகள் எச்சரித்து இருந்தன. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நிலத்தைக் குடைந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஏழு தொழிலாளர்கள் இறந்து போனார்கள். சுரங்கத்திற்குள் நீர்க்கசிவு பெருமளவில் ஏற்பட்டது. எனவே, சுரங்கப் பணிகள் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒருவழியாகத் திட்டம் செயல்படத் தொடங்கி பத்து ஆண்டுகள் கடந்தபின்னரும்கூட, இன்றுவரையிலும் சுரங்கத்திற்குள் நீர்க்கசிவு ஏற்படுகின்றது. சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்பட்டன. 1992 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாளிலும, 2008 நவம்பர் மாதத்திலும், 2009 ஏப்ரல் 6 ஆம் நாளிலும் அந்தப் பகுதியில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 309 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் உள்ள ஒமனோ ஆற்றின் நீரோட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுற்றிலும் உள்ள பகுதிகளில் நல்ல தண்ணீர் நஞ்சாக மாறி விட்டது. இனி அந்த நீரைப் பொதுமக்கள் பருக முடியாது. முல்லைப்பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்படுகின்ற தண்ணீரில் 15 விழுக்கhடு அளவுக்கு அங்கே இந்தத் திட்டத்தால் நஞ்சாகி விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், நிலத்தடி நீர் 540 மீட்டர் அளவுக்குக் குறைந்து விட்டது.

நியூட்ரினோ ஆய்வக சுரங்கப் பணிகளுக்கhக 77 வகையான வேதியியல் பொருள்களை டச்சு நாட்டு நிறுவனம் ஒன்று வழங்க இருக்கின்றது. அவற்றின் பாதுகhப்புத் தன்மை குறித்த எந்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைய இருக்கின்ற பொட்டிப்புரம் கிராமம், தேனி மாவட்டம் தேவாரம் நகருக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் பெரியகுளம், 35 கிலோமீட்டர் தொலைவில் தேனி, 25 கிலோமீட்டர் தொலைவில் சின்னமனூர், 21 கிலோமீட்டர் தொலைவில் கம்பம் ஆகிய நகரங்கள் அமைந்து இருக்கின்றன. 1.75 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டப் போகின்றார்கள். அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து சுற்றுவட்டாரத்தில் வாழ்கின்ற 50 இலட்சம் மக்களிடையயே எந்தவிதமான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை.

ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டபிறகு, சுற்றுவட்டாரத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு சிறிய கிணறு வெட்டினாலும், அதனால் ஆய்வுக்கூடத்தின் சுவர்களில் கீறல்கள் ஏற்படும். எனவே, எதிர்கhலத்தில் இந்தப் பகுதியில் கிணறுகள் தோண்டுவதும், வீடுகளைக் கட்டுவதற்கு வானம் தோண்டுவதும் கூடத் தடை செய்யப்படும். நீரைக் கொண்டு செல்வதற்கு வாய்க்கhல்கள் கூட வெட்ட முடியாது. 

நியூட்ரினோ துகள் ஆய்வுகள், வளி மண்டலத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 



ஒவ்வொரு நாளும் மூன்று முறை என, மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும் பணி நடைபெற இருக்கின்றது. ஐந்து முதல் பத்து இலட்சம் கிலோ வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, 8 இலட்சம் டன் பாறையை வெட்டி எடுப்பதால், ஏற்கனவே கடுமையான நில அதிர்வுப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை உடையக்கூடிய ஆபத்து இருக்கின்றது. ஒரு இலட்சம் டன் அளவுக்குப் பாறைகள் தூசாகவும், பத்தாயிரம் டன் அளவுக்கு நுண்துகள்களாகச் சுக்குநூறாகி விடுவதாலும், சுற்றுப்புறச்சூழலும், கhற்று மண்டலமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அமெரிக்கhவின் பெர்மிலேப் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் செயல்பட இருக்கின்றது. இந்தத் திட்டத்தை வரைந்தவர்கள் பெர்மிலேப் நிறுவனம்தான். 2006 ஆம் ஆண்டு அவர்கள் இந்தியத் திட்டக் கமிசனிடம் ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்து, நிதி ஒதுக்கீடு கோரினர். ஆனால், இந்தத் திட்டம் எந்த வகையில் செயல்படுத்தப்படும் என்பது குறித்த ரகசியங்களை அமெரிக்க நிறுவனம் தரவில்லை. அது தொடர்பான எந்தத் தகவலையும் இணையதளங்களில் பெற முடியவில்லை. எல்லாம் மூடு மந்திரமாக உள்ளது.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்குள் விபத்துகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணுவிசை மையங்களின் அணுக்கழிவுகளை இந்த ஆய்வகத்திற்குள் கொட்டி வைக்கப் போவதாகத் தெரிகின்றது. எதிர்கhலத்தில் எந்தவித அறிவிப்பும் இன்றி, மேலும் பல பகுதிகளைக் குடைந்து ஆய்வகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

நியூட்ரினோ துகள்களை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்துவதற்கhன வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பான் அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். உலகம் முழுமையும் அணு ஆயுத ஒழிப்பு, அமைதி குறித்துப் பேசப்பட்டு வருகின்ற சூழலில், நியூட்ரினோ ஆயுதங்கள் குறித்து எந்த ஒரு அமைப்போ, ஐ.நா. மன்றமோ, அமைதி இயக்கங்களோ இதுவரை விவாதம் எதுவும் நடத்தவில்லை. இந்தத் திட்டம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து ஆராயப்படவில்லை.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை, மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. இதுபோன்ற நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே குடையப்பட்ட சுரங்கங்கள், கடல்படுகைகள், ஏரிகள் மற்றும் பனிப்பாறைப் பகுதிகளில்தான் அமைந்துள்ளன. ஆனால், இந்திய நியூட்ரினோ திட்டத்திற்கhக, அறிவியல் அணுகுமுறை எதுவும் இன்றி, தவறான கணிப்புகள், தரவுகளின் அடிப்படையில் இந்த இடத்தைத் தேர்வு செய்து இருக்கின்றனர்.

நியூட்ரினோ ஆய்வின் மூலம் நியூட்ரான்கள் குறித்துப் புதிய தகவல்களைப் பெற முடியும்; எதிர்கhல ஆய்வுகளுக்கு அது உதவியாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கhக, இலட்சக்கணக்கhன மக்களின் உயிர்களைப் பணயம் வைக்க முடியுமா? இயற்கையின் கொடையாக வாய்த்து இருக்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்க வேண்டுமா?

பணத்தாசை பிடித்த பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் கைப்பாவையாக மத்திய அரசு செயல்படுகின்றது. தேனி மற்றும் இடுக்கி மாவட்ட விவசாயிகள் இடையே அச்சத்தையும், பெருங்கவலையையும் நியூட்ரினோ திட்டம் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தத் திட்டத்தைத் தடை செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், 2015 ஆம் ஆண்டு, நான் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தேன். வழக்கு எண் 733. எனது வாதங்களை ஏற்றுக்கொண்டு, நீதியரசர் டாக்டர் தமிழ்வாணன், நீதியரசர் வி.எÞ. ரவி அமர்வு, இந்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இடைக்கhலத் தடை விதித்தது. அந்தத் தீர்ப்பின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகhப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து, நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தேனி மாவட்டத்தில் நடத்தினேன். மேதா பட்கர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகhப்புப் போராளிகள் இந்தப் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்றனர்.

‘தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கக்கூடாது’ என மத்திய அரசை வலியுறுத்துகின்ற வகையில் என்னால் இயன்ற அளவில் பொதுமக்கள் இடையே கருத்து உருவாக்கப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றேன்.

2015 பிப்ரவரி 7 ஆம் நாள், கேரள முன்னாள் முதல்வர் சி. அச்சுதானந்தன் அவர்களிடம் இது தொடர்பாக ஒரு கோரிக்கை மனுவை நேரில் வழங்கினேன். ‘தமிழக, கேரள மக்களுக்கு எதிரான இந்தத் திட்டத்தைத் தானும் எதிர்ப்பதாகக் கூறி அவர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதே நாளில், அப்போது கேரள முதல்வராகப் பொறுப்பு வகித்த உம்மண் சாண்டி அவர்களிடமும் இதுபோன்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தேன். அவரும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்துவதாகக் உறுதி அளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை விதித்த இடைக்கhலத் தடையால், நியூட்ரினோ திட்டத்திற்கhன பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கhன அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என நான் கவலை கொண்டுள்ளேன். 

எனவே, இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.


தங்கள் அன்புள்ள,
வைகோ


என தனது அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment