ஓமன் மதிமுக இணையதள அணி பொறுப்பாளர்கள்
தேர்வு மற்றும் கலந்துரையாடல்
கூட்டம்!
ஓமன் மதிமுக இணையதள அணியின் கலந்துரையாடல்
கூட்டம் 03-11-2017 அன்று ஓமன் தலைநகர் மஸ்கட், ருசைல் மின்னா மஜான் ஹோட்டல் அருகில் உள்ள பார்க்கில் நடைபெற்றது.
மதிமுக தலைமை கழக அறிவுறுத்தலின் படி, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த்
கூட்டத்திற்கு ஏராளமான மதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
அதில் மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை உரை நிகழ்த்தி ஓமன் கழக கண்மணிகள், தலைமை கழகத்திற்கு நமது செயல்பாடுகளால், மக்கள் மத்தியில் இணையதளத்தில் எவ்வளவு ஆதரவு திரட்டுவது, கழக செய்திகளை மக்களிடத்தில் பகிருவது போன்றவற்றை பற்றியும் விரிவாக கூறி, அதனால் கழகம் பெறும் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.
பேராசிரியர் குழந்தைவேல் அவர்கள் கழக செயல்பாடுகளால்
மக்கள் நன்மைகள், தலைவர் வைகோ அவர்களின் அற்பணிப்பு பற்றி சிறப்புரையாற்றினார்.
சுலைமான் மாஹீன் அவர்கள் முன்னுரை நிகழ்த்தி அனைவரையும் வாழ்த்தி பேசினார்.
கலந்துகொண்ட கழகத்தினர் மதிமுகவின் கடினமான காலங்களையும், கழகத்தினரின் அற்ப்பணிப்பையும் சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்கள்.
மக்கள் வாழ்வாதாரங்களை
காக்கும் மதிமுகவின் செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம்:
1. ஓமன் மதிமுக இணையதள அணிக்கு புதிய பொறுப்பாளர்கள்
தேர்ந்தெடுக்க வலியுறுத்தி, வாய்ப்பு வழங்கிய மதிமுக தலைமை கழகத்திற்கு ஓமன் மதிமுக இணையதள அணி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
2. 2015-2016, 2016-2017 க்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்த தூத்துக்குடி மாவட்ட கழகத்திற்கும்,
கலந்துகொண்ட கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறது.
3. விவசாய துறையை நிதி ஆயோக் பரிந்துரைபடி, மாநில அரசு
பட்டியலிலிருந்து மத்திய அரசுக்கு பட்டியலுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த
மதிமுக தலைமைக்கு ஆதரவாகவும், மாநில அரசு பட்டியலிலே தொடரவேன்டுமெனவும், மதிமுக
ஒமன் இணையதள அணியும் வலியுறுத்துகிறது.
4.லாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கும் NLC பங்குகளை 15% தனியாருக்கு விற்க முயலுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஓமன் மதிமுக இணையதள அணியும் அதையே வலியுறுத்துகிறது.
தீர்மானங்கள் அனைவரது ஆதரவுடன் நிறைவேறிய பின்னர்,
மதிமுகவின் விதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரது ஆதரவோடும் ஓமன் மதிமுக இணையதள அணியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவைத் தலைவர் பொறுப்புக்கு சுலைமான் மாஹீன் அவர்கள் முன்மொழிய, சத்திய பிரகாஸ் வழி மொழிய ராஜாராம் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளர் பொறுப்புக்கு கலந்துகொண்ட அனைத்து கழகத்தினரின் ஒருமித்த ஆதரவால் மறுமலர்ச்சி மைக்கேல் (மைக்கேல் செல்வ குமார்) தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாளராக, ராஜகுரு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி நிர்வாகிகள் பட்டியல்?
அவைத்தலைவர்: ராஜாராம்
செயலாளர்: மறுமலர்ச்சி மைக்கேல் (மைக்கேல் செல்வ குமார்)
துணை செயலாளர்கள்: மாஹீன், வரதராஜ்
பொருளாளர்: ராஜகுரு
செயற்குழு உறுப்பினர்கள்:
1. பேராசிரியர் குழந்தை வேலு
2. ஆல்பின்
3.பிரேம் ஜாஸ்பர்
4. எல்லப்பன்
5.கிருஷ்ணகுமார்
6.சிப்பிபாறை ஜெயகணேஷ்
7.ராஜ்குமார்-முதுகுளத்தூர்
8.முருகராஜ்
9.சுரேஷ்-K.வெங்கடேஷ்வரபுரம்
புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும், மறுமலர்ச்சி மைக்கேல் வாழ்த்துதலையும், பணிகளை முன்னெடுத்து சென்று சிறப்பு சேர்க்கவும் கேட்டுக்கொண்டார்.
இதில் கலந்துகொண்ட கழக கண்மணிகள் விபரம் வருமாறு:-
1. மறுமலர்ச்சி மைக்கேல்
2.S.மாஹீன்
3.வளன் ஆல்பின்
4.சத்ய பிரகாஸ்
5. ராஜ்குமார் @ ஆனந்த்
6. கண்ணன்
7. ஜெயராம்
8. R.சுரேஷ்
9. S.லட்சுமிகாந்தன்
10. T.பால்துரை
11. முருகராஜ்
12. V.மாரிச்சாமி
13. ஜெயகணேசன்
14. ரா.எல்லப்பன்
15. ரூபன் ஜீசஸ் ரோஸ்
16. கிருஷ்ணகுமார்
17. S. ராஜ்குமார்
18. S.பிரபு
19. கிருஷ்ணமூர்த்தி
20. CV.ராஜாராம்
21. S.நவநீத கிருஷ்ணன்
22. இராதாகிருஷ்ணன் கலிங்கப்பட்டி
23. முனைவர். ம.ப.குழந்தைவேல்
24. J.பிரேம் ஜாஸ்பர்
25. P.ராஜகுரு
26. K.வரதராஜ்
27. T.S.பிரபு
கூட்டம் நிறைவில், சத்திய பிரகாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
மறுமலர்ச்சி மைக்கேல் (மைக்கேல் செல்வ குமார்)
செயலாளர் - ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment