பிரணாப் முகர்ஜியே திரும்பிப் போ என சொன்னதற்கு வைகோ நீதிமன்றத்தில் ஆஜர் மற்றும் ஈரானில் கைது செய்யபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்திப்பு!
ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது போர் நிறுத்தம் செய்திட உதவாத அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே திரும்பிப் போ என வலியுறுத்தி, கருப்புக்கொடி காட்டி, தூத்துக்குடியில் 28. 2. 2009 இல் கைதாகி பாளைச் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர் வைகோ உள்ளிட்ட 100 க்கும் மேற்ப்பட்டோர், நீதிமன்ற அழைப்பாணைக்கிணங்க, 29.11.2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஈரானில் கைது செய்யபட்ட நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தலைவர் அவர்களை சந்தித்து முறையிட்டனர்.
No comments:
Post a Comment