Wednesday, July 15, 2015

20 தமிழர்களின் நீதிக்காக தாயகத்தில் ஆலோசனை-ஜெக்கு கடிதம்!

ஆந்திராவில் இருபது அப்பாவி தமிழா்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நகா்வுகள் பற்றி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தாயகத்தில் தலைவா் வைகோ அவா்கள் ஆலோசனை. கலந்துரையாடலில் மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்,மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி,பெரியார் திராவிட கழகம் ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தை சார்ந்த ஹென்றி திபேன் ஆகியோர் செய்திருந்தனா். 

வைகோ செய்தியாளர்களிடம், ஆந்திரத்தில் தமிழர் படுகொலையில் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை தரப்படவில்லை. ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இந்த விசயத்தில் துணை போகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்திப்பதற்காக தமிழக முதல்வர் நேரம் ஒதுக்கி தரக் கோரி வைகோ அவர்கள் கடிதம் எழுதுவதெனவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான கடிதத்தை தமிழக முதல்வருக்கு வைகோ அவர்கள் இன்று எழுதியுள்ளாா்.

இந்த மாத இறுதிக்குள் அனுமதி கிடைக்கவில்லை என்றால் தீர்மானம் எடுத்தபடி நடவடிபக்கைகள் தொடங்கும். கோகுல்ராஜ் விசயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் பாதுகாப்பு குறித்து கவலைபடுகிறோம்.  சிறைபட்டிருக்கும் 2000 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment