Thursday, July 16, 2015

தூர்வாருவதை ஜோயல் கண்காணித்து அறிக்கை தர தீர்ப்பாயம் உத்தரவு!

திருவைகுண்டம் அணையைத் தூர் வாரக் கோரிய வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று (16.7.2015) விசாரணைக்கு வந்தபோது, .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தீர்ப்பாயத்தில் ஆஜராகி எடுத்துரைத்த வாதம் பின்வருமாறு...

தூர் வாரும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. நான் ஜூலை 6 ஆம் தேதி அணைக்குச் சென்று பார்வை இட்டேன். நான்கு பொக்லைன் இயந்திரங்கள் இயங்குகின்றன. மொத்தமே எட்டுப் பேர்தான் வேலை செய்கிறார்கள். பொதுப்பணித் துறையைச் சேர்ந்த எவரும் அங்கே இல்லை. இதுவரை 100 மீட்டர் நீளம், 80 மீட்டர் அகலத்திற்கு புதர்களை அகற்றி இருக்கின்றார்கள். இதே நிலை நீடித்தால் தூர் வாரும் பணியை முடிக்கப் பல ஆண்டுகள் ஆகும். வேலிக்காத்தான் முடட்களை மட்டுமே அகற்றி இருக்கிறார்கள்.எனவே 15 நாட்களுக்கு ஒரு முறை நடவடிக்கையை அரசு தெரிவிக்க வேண்டும். விவசாயிகளும் பொதுமக்களும், ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தீர்ப்பு ஆயத்தின் ஆணையால் தூர் வாரும் பணி நடந்து விடும்; விமோசனம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அங்கு தூர் வாரும் பணிகள் எவ்வளவு மந்த நிலையில் நடைபெறுகிறது என்பதற்கு ஆதாரமாக புகைப்படங்களை விண்ணப்பத்தோடு சேர்த்துத் தாக்கல் செய்து இருக்கிறேன்

தூர் வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்பதால், ஒவ்வொரு நாளும் எந்த அளவுக்குப் பணிகள் நடைபெறுகின்றன என்பதை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடியாகக் கண்காணித்து எனக்கு அறிக்கையாக அனுப்பி இருக்கிறார்கள்

நீதிபதி அவர்களே!

தனிப்பட்ட நலனுக்காகவோ அரசியல் காரணங்களுக்கவோ நான் போராடவில்லை,பொதுமக்கள் நலனுக்காகவே நான் வாதிடுகிறேன். எந்த நோக்கத்திற்காக நீங்கள் ஆணையிட்டீர்களோ, அந்த நோக்கமே நிறைவேற வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே, பணிகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம், இந்த வழக்கு ஒரு மாதத்திற்கு ஒருமுறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை தீர்ப்பு ஆயம் ஏற்க மறுத்துவிட்டது.

அத்துடன் நீதியரசர் ஜோதிமணி அவர்களும், தீர்ப்பு ஆயத்தின் நிபுணர் உறுப்பினர் நாகேந்திரன் அவர்களும் வழங்கிய தீர்ப்பில், பருவமழை தீவிரம் ஆவதற்கு முன்பே தூர் வாரும் பணி வேகமாக நடக்க வேண்டும். டெண்டர் கோரும் பணிகள் ஒருபக்கம் நடந்தாலும், மற்ற வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டும். தூர் வாரும் பணிகளை மேற்பார்வையிட்டுக் கண்காணிக்கவும், அதனை இந்தத் தீர்ப்பு ஆயத்திற்குத் தெரிவிக்கவும் மனுதாரர் ஜோயலுக்கு உரிமை உண்டு என்று அறிவித்து, வழக்கை ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment