Saturday, December 12, 2015

ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதிகளில் குப்பை அகற்றிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

சென்னை மக்களின் வாழ்வாதாரங்களின் அடிப்படை பிரச்சனையாக உருவெடுத்துள்ள வெள்ள நீரால் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுதல் பபணியினை மக்கள் நலக் கூட்டணி மேற்க்கொண்டது.

இன்று காலை 10-30 மணி அளவில் ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதிகளில், சுற்றுப் புறத் தூய்மையே சுகாதார வலிமை, அதுவே நமது கடமை, நாம் அனைவரும் இணைந்து நம் நகரை தூய்மையாக்குவோம் என்று கூறி தலைவர் வைகோ நேரடியாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் களத்தில் இறங்கி குப்பைகளை அள்ளினார்கள். தலைவர் வைகோ அவர்கள், நேரத்திற்கு முன்பே வந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கினார்.

தொடர் பணியில் அண்ணன் திருமா அவர்கள், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர், தலைவர் வைகோ ஆகியோருடன் தொண்டர்கள் இணைந்து குப்பைகளை அகற்றினார்கள். சென்னையை இதுவரை யாரும் சுத்தம் செய்யவில்லை, தலைவர் வைகோவுடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை தவிர. முட்டளவு சகதிகள் அத்தனையும் சுத்தம் செய்தார்கள் தலைவர்கள்.

இடையே ராஜ் தொலைக்காட்சிக்கு ம், குமுதம் பத்திரிக்கைக்கும் தலைவர் பேட்டியளித்தார்.


தலைவர் வைகோ அவர்கள், தொண்டர்கள் அள்ளி எடுத்த குப்பைகளை அப்புறப் படுத்தினார். உடை முழுதும் தலைவர்களுக்கு அசுத்தம் படிந்ததாலும், அதை பொருட்படுத்தாமல் அந்த இடம் அனைத்தையுமே சுத்தப்படுத்தினார்கள் தலைவர்கள்.

பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிரூபர் கேட்ட கேள்விகளுக்கு செய்யும் பணிகளை பற்றி விரிவாக விளக்கினார் தலைவர் வைகோ.

குப்பைகளை சுத்தம் செய்த பகுதியில், வறியவர் ஒருவரின் இல்லத்த்தில் முழுவதுமாக குப்பைகள் நிறந்து காணப்பட்டிருந்தது. அதை வைகோ பார்வையிட்டு சுத்தம் செய்து கொடுத்தார். வீடு சுத்தம் செய்த பின் வீட்டுக்காரர் யார் என கேட்டதற்கு தமீம் அன்சாரி என்றார் வீட்டு மனையாட்டி. உங்க பேர் என்ன இல்லத்தரசியை தலைவர் கேட்ட போது ஜெனிபர் என்றனர். .கலப்பு திருமணமா! வாழ்த்துகள் என்றார் தலைவர் வைகோ.


பின்னர் தமிழ் பிபிசி தொலைக்காட்சி உலகத் தமிழர் தலைவர் வைகோ அவர்களை பேட்டி எடுத்தது. பின்னரும் தொடர்ந்து மதிய உணவு இடைவேளை கடந்தும் கடமை தவறாத் தலைவராய் வைகோ அவர்கள் தோழர்களோடு தோழராய் வேலை செய்தார்.


அனைத்து இடங்களையும் சுத்தம் செய்த பின்னர் அனைத்து இடங்களுக்கு நோய் கிருமிகள் வராமல் தடுக்க சுத்தம் செய்த இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

குப்பைகளை அகற்றிய பகுதியில் ஒரு குழந்தைக்கு மதிவதனி என தமிழ் பெயர் சூட்டினார் தலைவர் வைகோ. அந்த அழகான தமிழ் பெயர் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவி பெயர் என்பது பெருமைபடத்தக்கதாகும்.

மக்களுக்கான இயக்கம் மதிமுக, மக்களுக்கான தலைவர் வைகோ என்பது மக்களின் மனதில் பதிந்து வருகிறது. இன்று குப்பையை அள்ளி ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்த தலைவர், நாளை தமிழக முதல்வராகி, உலகையே திரும்ப பார்க்க வைக்கும் காலம் கனிகிறது.

தமிழர்களே வைகோவே களத்தில் செய்கிறார், இப்போவாதாவது புரிந்து கொள்ளுங்கள். அவரோடு கரம் கோர்த்துவாருங்கள்.  தமிழக அரசியல், நிர்வாகம், ஊழல் இவைகளை நன்றாக சுத்தப்படுத்தி தூய்மைபடுத்துவோம்.

செய்தி: அம்மாபேட்டை கருணாகரன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment