Monday, December 14, 2015

எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் சாக்கடை குப்பைகளை அகற்றிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் உடுப்பி ஓட்டல் அருகில் பாரதி தெருவில் குப்பை சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக இன்று 14-12-2015 அன்று மக்கள் நலக் கூடணி தலைவர்கள் ஆட்டோவில் வந்திறங்கினார்கள். பின்னர் தொண்டர்களுடன், துப்புரவு செய்து குப்பை சாக்கடை கழிவுகளை அகற்றினார்கள்.

பணியில் ஜேசிபி இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது கொஞ்சம் இலகுவாக இருந்தது. பணிகளுக்கு இடையில் செய்தியாளர்களிடம் பேட்டி கண்டனர். அப்போது பேட்டியளித்த தலைவர் வைகோ அவர்கள், இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கொடிய தொற்றுநோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் நலக் கூட்டணியினர் சேற்றை துப்புரவு செய்து வருகிறோம். 

இந்த பேரளிவுக்கு காரணம் செண்பரம்பாக்கம் அணையை அள்வுக்கு மீறி திறந்துவிட்டதாகும். இதனால் தமிழக அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். தமிழக அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததால், முதல்வர் ராஜீனமா செய்ய வேண்டும் என கூறினார்.

குப்பைகள் அகற்றும் பணி முடிந்து தெருக்களிலேயே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அமர்ந்து ஓய்வெடுத்தனர். 

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சாதாரணமாக தெருக்களில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததை அத்தெருவை சார்ந்த தாய்மார்கள் அறிந்து ஓடி வந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து தங்கள் குறைகளை கூறினார்கள். அப்போது ஒரு அம்மா சொன்னார்கள். நான்கள் இதுவரை தலைவர்களை டிவியில்தான் பார்த்திருக்கிறோம் என்றார். அதற்கு மா.கம்யூனிஸ்ட் செயலாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் அது நிழல். இது நிஜம் என்றார்.

தாய்மார்கள் பலர் தங்கள் குழந்தைகள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டதாகவும் காய்ச்சலில் குழந்தைகள் கஷ்டபடுவதாகவும் சொல்லி தலைவர்களிடம் காண்பித்தார்கள். தலைவர் வைகோ அவர்களும் அண்ணன் திருமா அவர்களும் வாஞ்சையுடன் குழந்தைகளை வாங்கி குழந்தைகள் முகத்தை பார்த்தாலே வாடி இருப்பது தெரிகிறதே, சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளியுங்கள் என கேட்டு கொண்டனர்.

தலைவர் வைகோ அவர்கள் குப்பை அள்ளும் பணிகள் முடிவடைந்து நடந்தே வரும் போது துப்புரவு செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஓடோடி வந்து தலைவரை சூழ்ந்து கொண்டு அளவளாவி படம் எடுத்து கொண்டனர். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை உணர முடிந்தது.

எம்ஜிஆர் நகரில் சுத்தப்படுத்தும் பணி முடிந்ததும் தொண்டர்களுடன் சேர்ந்து மக்கள் நல் கூட்டணி தலைவர்கள் உணவருந்தினார்கள்.

செய்தி: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment