Thursday, December 10, 2015

மதிமுக மருத்துவர் அணி பிரிவு களத்தில் பாதிக்கபட்ட மக்களுக்காக சிகிச்சை!

சென்னைஅண்ணாநகர் பகுதி எம்ஜியார் காலனியில் மதிமுக சார்பில் இன்று 10-12-2015 மருத்துவமுகாம் நடைபெற்றது. மொபைல் அம்புலன்ஸ் யிலும் மருத்துவர்கள் நேரடி மருத்துவ களப்பணியில் இருந்தார்கள்.

சென்னை பெரும் மழை வெள்ளத்திலும் தொடர்ந்து பணிசெய்த பெண்காவல் துறையினர் பலரும் உடல்நலக்குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் மருத்துவசிக்கிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் மருத்துவ முகாமை தலைவர் "வைகோ" பார்வையிட்டார். அப்போது, 1550 நோயாளிகளை இதுவரை பார்த்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் டாக்டர்களுக்கு நன்றி கூறினார் தலைவர் வைகோ. அப்போது மருத்துவரும், மதிமுக மாநில மகளிரணி செயலாளருமான ரோஹையா அவர்கள், இது எங்களது கடமை என்று சொன்னதும் மகிழ்ச்சி என்று சொல்லி விடைப்பெற்றார்.

தொண்டு செய்ய எந்த இடமாய் இருந்தாலென்ன, திறந்த வெளியானாலும் தன் கடமை மறவாமல், சேத்துபட்டு ஹாரிங்டன் ரோடு இடத்தில் மக்களுக்கு பணியாற்றினார்கள் மதிமுக மருத்துவ அணியினர்.

இந்த மருத்துஅ குழுவில் டாக்டர் ரொகையா, டாக்டர் சாஞ்சி ரகுராமன், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கட்சி அடையாளம் ஏதுமின்றி உதவுவது யாரெனவே தெரியாமல் மக்களின் சுகாதார நலனில் அக்கறை எடுத்து கொண்டு தொண்டாற்றினார்கள் மதிமுக மருத்துவர்கள். 

இலவசங்களை விட உடல்நலம் முக்கியமென வலியுறுத்தும் தமிழின முதல்வர் வைகோ வின் வழியில் மாலை மயங்கியும் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள் டாக்டர் ரொகையா மற்றும் டாக்டர் ரகுராமன் குழுவினர். கழகத்தில் தொண்டாற்றி மக்களுக்கும் தொண்டாற்றுகின்ற மருத்துவர் சகோதரி ரோஹையா அவர்களை ஓமன் மதிமுக இணையதள அணி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment