Saturday, December 26, 2015

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் அரியலூர் மறுமலர்ச்சி மண்டல சந்திப்பு நிகழ்வில் வைகோ!

26.12.2015 காலை 11 மணி அளவில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் அரியலூர் மறுமலர்ச்சி மண்டல சந்திப்பு நிகழ்வில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில், 

மறுமலர்ச்சி என்ற சொல் ஐரோப்பா கண்டத்திலே உலவிய சொல். 1942 ல் அண்ணா காஞ்சியில் மறுமலர்ச்சி மன்றம் தொடங்கிய போது குறிப்பிட்டார்.
கலையிலே, கல்வியிலே, சிந்தனையிலே, ஓவிய கலையிலே, சிற்ப கலையிலே, இந்த மறுமலர்ச்சியை காண்பதற்கு ரத்தம் சிந்தியவர்கள், உயிர்களை கொடுத்தவர்கள் எண்ணற்றவர்கள்.

மறுமலர்ச்சி என்றால் என்ன, தூசுபடிந்து மாசடைந்திருக்கும் ஓவியத்தை பொலிவுபடுத்துவது, சிதிலமடைந்த சிற்ப்பங்களை செப்பமாக்குவது, அழுக்கடைந்திருக்கின்ற தடாகத்தை சுத்தப்படுத்துவது, கூனி போன கொள்கைகளை நிமிர செய்வது என உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அவர்களை நெஞ்சிலே நிறுத்திய அண்ணா அவர்கள் பயன்படுத்திய சொல்தான் மறுமலர்ச்சி என மறுமலர்ச்சிக்கு விளக்கமளித்தார் தலைவர் வைகோ அவர்கள். 

இதில் ஏராளமான கழக தொண்டர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் என கலந்துகொண்டனர்.

ஒமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment