Thursday, July 9, 2015

இயக்குநர் சிகரத்தின் உண்மையான கதாநாயகன் வைகோ!

கலை உலகின் ஈடு இணையற்ற கலைஞர்,இயக்குநர் சிகரம் கே.பி என்று அனைவராலும் அழைக்கப்படும் பிதாமகன் பாலச்சந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

Dec 23,2014 அன்று இராயபுரம் தங்கசாலை மணிக்கூண்டில் திருப்பதி சென்று வெற்றிகரமாக இராஜபக்சே என்ற மிருகத்துக்கு கருப்புக்கொடி காட்டி வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேங்கைகளுக்கு பாராட்டு விழாப் பொதுக்கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெற்றது.

அதில் பல தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தலைவர் இடைமறித்து ஒலிபெருக்கியில் "இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் மறைந்து விட்டார்.அனைவரும் 1 நிமிட அஞ்சலி செலுத்துங்கள்" என்றார்.

அதன் பின்பு தலைவர் நிறைவுப் பேருரையாற்றும் பொழுது "நான் பொடா சிறைவாசம் முடிந்து வெளியே வந்த பொழுது என் இல்லத்தில் சந்தித்த அவர்,சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்களை உருவாக்கியிருக்கின்றேன்.ஆனால் நான் பார்த்த நிஜ கதாநாயகன் நீங்கள் தான் என்றார்.அவர் மகன் இறந்த பொழுது அவரது இல்லத்திற்குச் சென்று அவருடன் 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்" என்றார்.

கலிங்கப்பட்டி கண்டெடுத்த, நடிக்கத் தெரியாத கதாநாயகர், கருப்புச் சால்வை கரிபால்டி, எங்கள் தலைவர் வைகோ அவர்கள்!!!


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment