Friday, October 23, 2015

ஓமன் மதிமுக இணையதள அணியின் அறந்தை அலி ஆவேசம்! தின செய்தி பத்திரிகையை எரித்து எதிர்ப்பு!

தின செய்தி என்கிற தினசரி நாளேடு வெளியிடுகிறோம். மதிமுக இருட்டடிப்பு செய்வதை தடுக்க கழக செய்திகளை நாங்கள் பிரசுரம் செய்கிறோம் என கூறி மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர், எதிரிகள் கூட விரல் நீட்டி சொல்ல முடியாத அளவுக்கு இந்திய அரசியலில் ஒழுக்கமுள்ள, இந்திய அரசியல் தலைவர் வைகோ அவர்களிடத்தில், இமயம் தொலைக்காட்சி உரிமையாளரும், மதிமுக தொண்டர்களின் Indian Rupee symbol.svg5 கோடி ரூபாயை மோசடி செய்தவருமான ஜெபராஜ் தெரிவித்தார். கள்ளம் கபடம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு ஒழுக்க முள்ள, ஈ, எறும்புகளுக்கு கூட தீங்கு விளைவிக்காத எங்கள் தலைவர், வைகோ அவர்களும் ஜெபராஜை நம்பினார். ஏனென்றால் 2009 ல் வலிய வந்து உங்களுக்கு உதவுகிறேன் என வந்து, இமயம் தொலைக்காட்சியில் தலைவரின் பேச்சுக்களை ஒளிபரப்பியவராயிற்றே! (ஓசிக்கு அல்ல Indian Rupee symbol.svg1.1/4 கோடி கழகம் கொடுத்திருக்கிறது விளம்பரத்திற்கு ). 

தலைவர் வைகோவும் யோசித்தார். கழக கண்மணிகளிடத்தில் உரையாடினார். மாவட்டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் என்று நடத்தி வருட சந்தா வருடத்திற்கு செலுத்த ஏற்பாடு செய்தார். கழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து சந்தா வசூலித்தார். அதில் தலைவரே நேரில் சென்று பணத்தை பெற்றுக்கொள்வார். பலியிடுவதற்கு கொண்டு செல்லும் ஆடு பவ்யமாக இருப்பதை போல (திருடர்களின் முழி) ஜெபராஜும் கலந்துகொள்வார். அனைத்து மாவட்டங்களிலும் பணம் வசூலித்து Indian Rupee symbol.svg5 கோடி ஜெபராஜிடம் கொடுக்கப்பட்டது.

தலைவர்தான் முதல் சந்தாவாக, ஒரு வருடத்திற்கு சந்தா Indian Rupee symbol.svg1900 வீதம் பத்து வருடத்திற்கான சந்தாவை ஜெபராஜிடத்தில் கொடுத்தார். ஒரு பத்திரிகையின் விலை Indian Rupee symbol.svg6 விலை வைத்து கொடுப்பதற்காக வசூலித்தார். ஆனால் சென்னையில் மட்டும் வெளிவந்திருக்கும் பத்திரிகையின் விலை இப்போது Indian Rupee symbol.svg3 மட்டுமே! அபடியென்றால் அதிலும் இரட்டிபு மோசடி. அதிலும் சந்தா செலுத்தியவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. 

இப்படியிருக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும், மறுமலர்ச்சி கைக்கேல் அவர்கள் 2015 ஜூன் 25 அன்று நடந்த கன்னியாகுமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 சந்தா கொடுக்கப்பட்டது. தலைவர் வைகோ அவர்கள் 10 வருடத்திற்கு சந்தா கொடுத்தது போல. இந்த சந்தாவானது தலைவர் வைகோ அவர்களிடத்தில், கழக பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த ராஜன் அவர்கள் தக்கலை ஒன்றிய சந்தாக்களுடன் கொடுத்தார். அப்போது தலைவரிடத்தில் தெளிவாகவும் சொல்லி கொடுக்கப்பட்டது. பின்னரும் ஜெபராஜ் அவர்களிடத்தும் தெரிவிக்கப்பட்டு வரவும் வைக்கப்பட்டது. 

பத்திரிகை வரவில்லை, கால தாமதமாகிகொண்டேயிருந்தது. கடைசியாக ஜெபராஜ் திருப்பூர் கழக மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவர் வரமாட்டார் என்பது அதற்கு முன நடந்த உயர்நிலை குழு கூட்டத்திலே அரசல் புரசலாக பேசப்பட்டுவிட்டது. இந்நிலையில் பத்திரிகை வெளிவந்தது. அதோடு அவருடைய விலகல் கடிதமும் தலைவர் வைகோவுக்கு வந்தது, உயர்நிலை குழு உறுப்பினர், கழக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து கழக பொறுப்புகளிருந்தும் விலகுகிறேன் என. இப்போது துரோகம் வெளிப்பட்டுவிட்டது. Indian Rupee symbol.svg5 கோடி அமுக்கப்பட்டுவிட்டது.

சென்னையை தவிர இரத மாவட்டங்களுக்கு பத்திரிகை வெளிவரவில்லை. சென்னைக்கு வெளியிலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து சந்தா கட்டியவர்கள் பணம் பறி போகும் தருவாய். ஏனென்றால் சென்னையை தவிர இரத மாவட்டங்களில் தின செய்தி பத்திரிகை வெளிவருமா என்பதை கேள்விக்குறீயாக்கிவிட்டார் ஜெபராஜ்.

இந்நிலையில் ஓமன் மதிமுக இணையதள அணியின் முத்த உறுப்பினர், தலைவரின் மேல் வெறிகொண்ட தொண்டன் அறந்தை அலி அவர்கள் பத்திரிகையை பற்றி கேட்டுக்கொண்டேயிருந்தார். தாயக விடுமுறையை கழித்து ஓமன் திரும்பும் வேளையில் சென்னையிலிருந்து தின செய்தி பத்திரிகையை வாங்கி கொண்டு வந்தார். ஜெபராஜை பற்றி பத்திரிகை வெளிவராததாலும், கழகத்தை விட்டு ஜெபராஜ் வெளியேறியதாலும் பல சமயங்களில் ஆவேசப்படுவார். அப்போது மறுமலர்ச்சி மைக்கேல் சமாதானப்படுத்துவார்.

இந்நிலையில், தலைவர் வைகோவுக்கும், மதிமுகவுக்கும், கழக தொண்டர்களுக்கும் பச்சை துரோகம் இழைத்த ஜெபராஜின் தின செய்தி பத்திரிகையை இன்று ஆவேசம் பொறுக்க முடியாமல், தின செய்தி பத்திரிகைக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பத்திரிகையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தார். நண்பர்கள் அனைவரும் ஆத்திரப்பட்டாலும், லட்சிய தலைவனின் கண்ணசைவின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்பதை ஜெபராஜ் மறக்கவேண்டாம்.

தொண்டர்களுக்கு பணம் பெரிதல்ல, தலைவரை ஏமாற்றியதைதான் தாங்க முடியவில்லை. ஜெபராஜுக்காக தொண்டர்கள் சந்தா கொடுக்கவில்லை, லட்சிய தலைவர் வைகோ வசூலித்ததால் கொடுத்தோம். எங்கள் தலைவனுக்கு கொடுப்பது எதிர்பார்த்து அல்ல. தமிழக மக்களின், நல்ல விடயங்களுக்காக பயன்படுத்துகிறார் என்பதற்காக. வாழ்நாளில் கொடுத்துபார் அதை விட சந்தோசம் வேறெங்கும் கிடையாது என்பது போல கொடுத்தோம் சந்தோசமாக. அப்படிபட்ட பணத்தையே ஆட்டை போட்டுவிட்டது துரோகத்திற்கு பெயர்போன ஜெபராஜ்.

தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்த ஜெபராஜின் தின செய்தி பத்திரிகையை எரித்து ஓமன் இணையதள அணியின் எதிர்ப்பை ஜெபராஜுக்கு தெரிவித்த, ஓமன் மதிமுக இணையதள அணி முத்த உறுப்பினர், அண்ணன் அறந்தை அலி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment