Tuesday, October 27, 2015

கொடைக்கானல் சுற்றுசூழல் மாசுபாட்டிற்காக யுனிலீவர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல கூட்டியக்கம் கோரிக்கை !!

கொடைக்கானல் சுற்றுசூழல் மாசுபாட்டிற்காக யுனிலீவர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுனிலீவர் நிறுவனத்தைக் கண்டித்து, தமிழ்நாட்டின் மூன்று முக்கியக்கட்சித் தலைவர்கள், கொடைக்கானல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள காடுகள், காட்டில் வாழும் உயிரினங்கள், தண்ணீர் மற்றும் மீன்கள், இவற்றை ஆதாரமாகக்கொண்டு வாழும் மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அப்பகுதியை சுத்தீகரிப்பு செய்ய வலியுருத்தகோரி தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி. ரவிகுமார், பொதுச்செயலாளர் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), மல்லை சத்யா, (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்) ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

யுனிலீவர் நிறுவனத்தின் தொழிற்சாலை சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்தின் மத்தியில் அமைந்திருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அந்நிறுவனத்தின் குடியிருப்பு அளவு பரிந்துரைப்படி 1 கிலோ கிராம் மண்ணில், 20௨5 மில்லி கிராம் பாதரசம் இருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இது இந்நிறுவனத்தின் தலைமையகமான இங்க்லாண்டின் குடியிருப்பு அளவுகளைக்காட்டிலும் 25 மடங்கு மோசமானது.

மண்ணின் இயற்கையான பாதரச அளவான - 1 கிலோ கிராம் மண்ணில் 0.1 மில்லி கிராம் பாதரசம் என்ற அளவிற்கு குறையும்படி மண்ணை சுத்தம் செய்யும்படி அக்கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர். யுனிலீவர் நிறுவனம் எவ்வளவு நிர்மலமான ஒரு சூழலில் இயற்கையாகவே -- 1 கிலோ கிராம் மண்ணில் 0.1 மில்லி கிராம் பாதரசத்திற்கு மிகாமல் அமைந்துள்ள ஒரு சூழலில் -- உள்ளது எனவும் சுட்டிக்காட்டினர். எனவே தாமதம் இல்லாமல் பாதரசத்தின் அளவைக்குறைக்க யுனிலீவர் நிறுவனம் வலியுருத்தப்பட வேண்டுமென்று கூறினர்.

ஜூன் 2015ல் நடந்த ஒரு ஆய்வின்படி விஷத்தன்மை மிகுந்த பாதரசம் எவ்வாறு மூடிய தொழிற்சாலையிலிருந்து பாம்பார் சோலை காடுகளை மாசுபடுத்துகிறது என்று சுட்டிக்காட்டினர். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் யுனிலீவர் நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தினர். மேலும் அந்நிறுவனம் சுற்றுசூழலை பாதரசத்தால் விஷமாக்கியதற்காக வனத்துறைக்கு நஷ்டயீடு வழங்கவேண்டுமென்றும் கூறினர்.

2002ஆம் ஆண்டில் பாம்பார் பள்ளத்தாக்கில் அமைந்த காடுகளில் 1.3 டன் பாதரசத்தை வெளியேற்றியது என்று யுனிலீவர் ஏற்றுக்கொண்டது. வாயுவாக வெளியேற்றப்பட்ட இக்கழிவை சுத்தப்படுத்த இயலாது. மேலும் இக்கழிவு காட்டில் வாழும் உயிரினகளுக்கும், நீர்நிலைகளுக்கும், மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.

இந்த மாசுபாடினால் பல குடும்பங்களின் நலவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவரீதியாகவும், பணரீதியாகவும் கைகொடுத்து உதவவேண்டும் என்றும் கட்சித்தலைவர்கள் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டனர். யுனிலீவர் நிறுவனம் தொழிற்சாலை கழிவுகளை அகற்றி சூழலை சுத்தப்படுத்தும் வரையிலும், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் நஷ்டயீடு வழங்கும் வரையிலும் இபிரச்சனையின் தீர்ப்பை நோக்கிய முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

டாக்டர். ராக்கல் கைடோண்டே, மருத்துவர் மற்றும் தமிழ்நாட்டின் பாதரச மாசுபாட்டிற்கு எதிரான குழுவின் ஆலோசகர், கட்சியினரை அறிமுகப்படுத்தி, முன்னுரை வழங்கினார். செய்தியாளர் கூட்டத்தின் ஒருங்கிணைப்பு: "சென்னை சாலிடரிட்டி குரூப் " மற்றும் பூவுகளின் நண்பர்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment