Wednesday, October 21, 2015

மதுரை நேதாஜி பிரகடன பொதுக்கூட்டத்தில் வைகோ உரை!

மதிமுக மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நடந்த இந்திய விடுதலை நேதாஜி பிரகடன பொதுக்கூட்டத்தில், தலைவரை வரவேற்று "இசைமுரசு" நெல்லைஅபுபக்கர் இன்னிசை முழக்கம் நடந்தது.

வானவேடிக்கை முழங்க நேதாஜி பிரகடன பொதுக்கூட்ட மேடைக்கு தலைவர் வைகோ வருகை புரிந்தார். பின்னர் மதுரை மாநகர்மாவட்ட கழகம் சார்பில் தலைவருக்கு வெற்றிமாலை சூட்டப்பட்டது.

பொடா புதூர் பூமிநாதன் தலைம உரையாற்றினார். தொடர்ந்து, புலவர் செவந்தியப்பன், ஏனைய மாவட்ட செயலாளர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் பேசிய தலைவர் வைகோ அவர்கள், வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவை, தோற்கடித்துமக்கள்நலகூட்டுஇயக்கம் ஆட்சியை பிடிக்கும். ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பில் .தி.மு. இடம்பெற்றுள்ள மக்கள் நல கூட்டணி 76℅ வாக்குகளை பெறும் என்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தார். அப்போது மக்கள் கரவோசம் விண்ணை பிளக்கிற அளவுக்கு அதிர்ந்தது.

மாவீரன்நேதாஜியின் இந்திய விடுதலை போராட்ட "தியாக வரலாற்றை" நவம்பர் 26 ஆம் நாள் "நேதாஜி" எழுதிய கடிதம் "வரலாற்று ஆவணமானது! அந்த நவம்பர் 26 ஆம் தேதிதான் "நேதாஜியை" நெஞ்சத்தால் பூஜித்த "மாவீரர் திலகம்பிரபாகரன் பிறந்தநாள்! இதுதான் வரலாற்று அதிசயம் என தலைவர் உரை நிகழ்த்தினார்.

மேலும், உலகில்நேதாஜியைபோல ஒரு மாவீரனை பார்க்க முடியாது! மகாத்மாகாந்தி அவர்களுக்குதேசபிதா என பெயர் சூட்டியவரேநேதாஜிதான் எனவும் புகழாரம் சூட்டினார் தலைவரி வைகோ அவர்கள்.

மக்களவை 546 எம்.பிக்கள், மாநிலங்களவை 254 எம்.பிக்கள் கொண்ட பாராளுமன்றத்தில், ‪நேதாஜியின் மகள்அனிதா போஸை, நீங்கள் நேதாஜியின் பேத்தியா? என்று கேலி பேசிய அன்றைய பிரதமர்ராஜீவ்காந்தியை பாராளுமன்றத்தில் கண்டித்து உரையாற்றிய ஒரே இந்திய எம்.பி, அடியேன் வைகோ என தலைவர் வைகோ பெருமிதம் பொங்க பேசினார்.

இந்தியாவின் சுதந்திரத்தை பெற்றுத்தந்தத உண்மையான "தேசபிதா" மாவீரன்நேதாஜி எனவும் புகழாரம் சூட்டினார். அப்போதும் கரவொலி விண்ணை பிளக்கிற அள்வுக்கு இருந்துது.

தொடர்ந்து பேசிய தலைவர் வைகோ அவர்கள், மதிமுகவினரின் பதாகைகளுக்கு அனுமதிக்காத காவல்துறைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஜெயா வரும் போது பதாகையை வைக்க விடாமல் தடுப்பாயா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இங்கிலாந்து உளவுதுறை தலைவர்நார்மன், இந்திய விடுதலை என்பதுநேதாஜிக்காக கொடுக்கப்பட்டது என சொன்னதாக தெரிவித்தார். மேலும், இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்கள் அனைவரும் நேதாஜி படையில் சேர்ந்து விடுவார்கள், நாமாக வெளியேறி விடுவது நல்லது. இல்லையேல் நேதாஜி கைப்பற்றும் நிலை வந்துவுடும், இதனால் உடனடியாக விடுதலை கொடுத்து நேதாஜியைக்காட்டிக்கொடுத்ததாக உறுதியாக ஆதாரங்களோடு தெரிவித்தார்.

மாவீரன்நேதாஜி ரஷ்யாவில்சைபீரிய சிறையில் 45ம் எண் அறையில்சித்ரவதைப் படுத்தப்பட்டதாக உறுதி படத் தெரிவித்த தருணம் எடுக்கப் பட்ட படங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

மதிமுக  இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment