Sunday, January 31, 2016

கட்டுரை போட்டியில் பிள்ளைகளை வாழ்த்தி பரிசு வழங்கினார் வைகோ!

கரூர் மாவட்டம் அரவகுறிச்சி மதிமுக ஒன்றியத்தின் சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று 31-01-2016 மாலை 5 மணி அளவில் சங்கமம் மஹாலில் நடந்தது. இதில் மதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசியபோது, பிள்ளைகளை திட்டாதீர்கள். மார்க் குறைந்தால் குழந்தைகள் கவலை பட வேண்டாம். தைரிய உணர்வுகள் குறந்துவிட்டது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு வேன்டுகோள் வைத்தார்.

பிள்ளைகள் கேட்பதையெல்லாம் பெற்றோர்கள் வாங்கி கொடுக்காதீர்கள். இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வாழ்வதில்லை.

புத்தக சுமையை சுமக்கிற பிள்ளைகள் விளையாட வேண்டும், ஓடி விளையாடு பாப்பா என பரதி பாடலை சொல்லி விளக்கினார். பிள்ளைகளுக்கு இப்போது அரசியல் வேண்டாம். அரசியலை கவனியுங்கள். புத்தகங்களை படியுங்கள். வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

பிள்ளைகள் உடல் நலன் குறைவு என தெரிந்தால் உடனே தகுந்த மருத்துவரிடம் காண்பியுங்கள். பெற்றோம் பிள்ளைகளிடம் அன்பை செலுத்துங்கள். அதிக செல்லம் கொடுக்காதீர்கள். கண்டிப்பு என்ற பெயரில் அதிகம் திட்டாதீர்கள்.

பிள்ளைகளிடம் ஆபத்துகள் எப்படி நடக்கும் என்பதை விளக்கி அதை அவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். பிள்ளைகள் சமூகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். சக மனிதர்களை அறிந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகளை வாழ்த்துகிறேன். கல்வியில் வெற்றி மேல் வெற்றி பெற வழ்த்துகிறேன். பெற்றோருக்கு பெருமை கிடைக்க வாழ்த்துகிறேன் என வைகோ பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வி.கே.டி.பாலன் இல்ல மண விழாவில் வைகோ!

சென்னை மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் ஐயா வி.கே.டி.பாலன் அவர்களுடைய மகன் சிறீகரன் திவ்யா திருமணத்தில் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார், திருக்குறள் பரிசு வழங்கினார். உடன் தொல்.திருமாவளவன். டிராபிக் இராமசாமி. வி.கே,டி பாலன் ஆகியோர் இருந்தனர்.

இந்த நிகழ்வில், இசைக்குயில் பி.சுசீலா, ஏவிஎம் சரவணன் ஆகியோரிடம் நலம் விசாரித்தார் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

தாக்குதலுக்குள்ளான பழ.கருப்பையாவை சந்தித்தார் வைகோ!

31.01.2016 இன்று காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவை அவர்களுடைய இல்லத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்று பழ.கருப்பையவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலும் தேறுதலும் கூறினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

அவரகுறிச்சி பரிசளிப்பு விழா வைகோ பங்கேற்பு! பம்பரம் டிவியில் நேரலை!

இன்று 31-01-2016 மதியம் 3.00 மணிக்கு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சங்கமம் மஹாலில் ஏற்கனவே அரவகுறிச்சி ஒன்றிய மதிமுக நடத்திய பள்ளி-கல்லூரி மாணவ மணவியருக்கான கட்டுரைப் ப்போட்டிக்கு பரிசளிக்கும் விழா நடைபெறுகிறது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளை உற்சாகபடுத்துகிறார். 

இந்த நிகழ்ச்சியானது, பம்பரம் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. பம்பரம் டிவியை காண www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கி நேரலை காணலாம்.

உங்கள் வீட்டிலிருந்தே அரவகுறிச்சி நிகழ்ச்சியை காண உங்கள் இதய குரலாக செயல்படும் பம்பரம் டிவியை காணதவறாதீர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மக்கள் நலக்கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு தா.பாண்டியனுக்கு வைகோ நேரில் அழைப்பு!

31.01.2016 இன்று காலை 8:00மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, மக்கள் நலக்கூட்டணியின்  வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் ஒருங்கிணைப்பாளர் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, January 30, 2016

சேலம் மாவட்ட மதிமுக நடத்திய மாற்று அரசியல் விளக்க பொதுக் கூட்டம்!

30.01.2016 இன்று மாலை சேலம்-பாஸ் மைதானத்தில் "மாற்று அரசியல்" விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்ற மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஆனந்த ராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

இதில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். தலைவர் வருகை தந்ததும், தப்பாட்ட கலைஞர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார் வைகோ. மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த கூட்டத்தில், நம்பிக்கை நட்சத்திரங்களான இளைய பட்டாளங்கள் தலைவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். சேலம் மாநகரம் என்றுமே ம.தி.மு.க. வின் கோட்டைதான் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த கூட்டத்திற்கு எராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார். கழக முன்னோடிகளும் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியை பம்பரம் டிவி ஒருங்கிணைப்பு குழுவினர் பம்பரம் டிவி வாயிலாக நேரலை செய்தனர். இதை உலக தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கண்டுகளித்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி