Wednesday, January 20, 2016

தலித் மாணவர் இறப்புக்கு காரணமானவர்களை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்,  தலித் மாணவர் ரோகித் வெமுலா. 

அவரின் மரணத்திற்கு நீதி கேட்டும், அதற்குக் காரணமான மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டார தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோரை கைது செய்யக் கோரியும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பதவி விலகக்கோரியும், ரோகித்தின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற மாணவர் அமைப்புகளான மறுமலர்ச்சி மாணவர் மன்றம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மாணவர் முற்போக்குக் கழகம் ஆகிய மாணவர் அமைப்புகள் இணைந்து நாளை 21.01.2016 வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கிற மத்திய அரசின் சாதிய இந்துத்துவ அராஜகத்தை ஒழித்திட ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வலிமையான முறையில் நடத்தி மத்திய அரசை பணிய வைக்க வேண்டுமெனவும் உறுதியோடு போராட ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment