Saturday, January 2, 2016

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஏ.பி.பரதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பரதன். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.பி.பரதன் இன்று மாலை காலமானார். அவருக்குவயது 92.

பரதன் அவர்கள், வர்த்தக சங்கத்திலும் இடதுசாரி கட்சியிலும் முக்கிய தலைவராக இருந்தார். கடந்த 1957ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் இந்தியாவின் பாரம்பரிய வர்த்தக சங்கமான அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் தேர்வானார். இதன் பின்னர் கடந்த 1990களில், டில்லி அரசியலுக்கு நுழைந்த பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். இதன் பின்னர் 1996ல் இந்திரஜித் குப்தாவுக்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வானார். 

பேராசிரியராக பணியாற்றிய அவரது மனைவி கடந்த 1986ம் ஆண்டு காலமான பின்பு, கட்சியின் தலைமையலுவலகத்தில் தங்கினார் பரதன். அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக தில்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுிதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று உடல்நிலை மோசமானதை தொடர்ந்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இன்று அவரது உடல்நிலை அபாயகரமான நிலையை எட்டியதையடுத்து காலமானார். பரதன் காலமானபோது, டாக்டர் பருவா மற்றும் பேராசிரியர் அசோக் பரதன் அருகில் இருந்தனர்.

பரதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியையும், அவரின் ஆன்மா திருவருள் சேரவும், அவரை இழந்து வாடும் குபத்தாருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment