Sunday, January 24, 2016

தூத்துகுடி மதிமுக நிர்வகிகள் கூட்டம் இதுவரை காணாத எழுச்சியோடு!

தூத்துக்குடியில் 23-01-2016 சனிக்கிழமை மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 100 க்கும் மேற்ப்பட்ட மகிழுந்திலும், 300 க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனத்திலும் தொண்டர்கள் தலைவர் வைகோவை வரவேற்றனர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் நல கூட்டணியை வெற்றி பெற செய்து மக்கள் தலைவர் வைகோ பாதத்தில் சமர்ப்பிப்பேன் சூளுரைத்தார். 

அந்த நிகழ்வில் வைகோ பேசியதாவது, மாக்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுடன் மதிமுக இணைந்து அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறது.

அதிமுகவும், திமுகவும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற எண்ணம் படைத்த நடுநிலையாளர்கள் உள்ளத்தில் அடுத்து யார் என்ற கேள்விக்கு விடையாக அமைந்துள்ளதுதான் மக்கள் நலக் கூட்டணி. தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இருந்து மதிமுகவினர் ஐந்தாயிரம் பேர் விலகி திமுகவில் இணையப் போகின்றனர் என்று பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 1996-இல் இருந்து இதுவரை மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்ததாக வெளியான கணக்கைப் பார்த்தால் ஒரு கோடி பேருக்கு மேல் போய் இணைந்திருக்க வேண்டும். 

மதிமுக கூண்டோடு காலி என்று இருபது ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகளை மூடுவோம் என்று ஏமாற்று வேலையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மதுவைக் கொண்டு வந்ததே திமுகதானே. மதுவை ஒழிப்போம் என்று பேச திமுகவுக்கு தகுதி கிடையாது என்றார் வைகோ. 

மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 5 லட்சம் வைகோவிடம் வழங்கப்பட்டது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment