Tuesday, February 16, 2016

பள்ளி கட்டடத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்காத குமாரபுரம் பேரூராட்சி தலைவரை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

குமரி மாவட்டம் பெருஞ்சிலம்பில் அரசு உயர்நிலை பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வகுப்பறை பற்றாகுறையால் கூடுதலாக, புதிய வகுப்பறை கட்ட மத்திய அரசின் ஆர்.எம்.எஸ் திட்ட்த்தின் கீழ் 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குமாரபுரம் பேரூராட்சியில் கட்டிடம் கட்ட தடையில்லா சான்று வேண்டும் என்று பள்ளி தரப்பிலிருந்து கோரிக்கை வைத்தும் பள்ளிக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி பேரூராட்சி கமிட்டியில் நிறைவேற்ற பட்ட தீர்மான நகலை தராமல் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் அனிதா ஜென்கின்சால் செயல் அலுவலர் ஆகியோர் சுமார் 4 மாதங்களாக தடையில்லா சான்றிதழ் கொடுக்க காலம் தாழ்த்தி வந்தார்கள்.

செயல் அலுவலரிடம் கேட்டால் பேரூராட்சி தலைவர் அனிதா ஜென்கின்ஸ் கொடுக்க கூடாது என்கிறார் என்று சொல்லியுள்ளதாக கூறுகிறார். அரசு பள்ளி கட்டிடத்திற்கே இந்த நிலை உள்ளது. வேண்டுமென்றே தலைவர் திட்டமிட்டு பெருஞ்சிலம்பு அரசு பள்ளி மூட வேண்டும் என்று இழுத்தடிக்கிறார் என பெருஞ்சிலம்பு பகுதி மக்கள் மிகுந்த கோபமடைந்தனர்.

இதனால் பெருஞ்சிலம்பு பகுதி மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் பெருஞ்சிலம்பு பள்ளிக்கு இடையூறு ஏற்படுத்துவதை எதிர்த்து பெருஞ்சிலம்பு பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட தயாராகினர்.

இந்நிலையில் இந்த அரசு பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுக்கும் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் அனிதா ஜென்கின்சை கண்டித்தும், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தீர்மான நகல் தர கேட்டு குமாரபுரம் பேரூராட்சியில் நேற்று 15-02-2016 காலை 10 மணி முதலே உள்ளிருப்பு போராட்டத்தை, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் தொடங்கினார்கள். 10: 30 மணி ஆகியும் செயல் அலுவலர் பேரூராட்சி அலுவலகம் வரவில்லை

காலை முதலே நடைபெறுகின்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு மாணவ மாணவிகளும் மதியம் கலந்து கொண்டனர். ஆனாலும் எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கிராம கல்வி குழு தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். மேலாண்மை குழு தலைவர் பெல்லா முன்னிலை வகித்தார். மதிமுக மாவட்ட பொறியாளரணி செயலாளர் Er.சுரேஷ் குமார், மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் ஜான் இம்மானுவேல், மார்க்சிஸ்ட் கட்சி குமாரபுரம் பகுதி செயலாளர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சி தக்கலை ஒன்றிய செயலாளர் சைமன் சைலஸ், தக்கலை மதிமுக ஒன்றிய செயலாளர் ஜே.பி.சிங், வட்டார காங்கிரஸ் தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் நாராயண குமார், திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்குபெற்றனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment