விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மதிப்புக்குரிய அண்ணன் ஆர்.நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி ரஞ்சிதம் அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.
வாழ்நாள் முழுதும் போராட்டக் களத்தில் நின்ற அண்ணன் ஆர்.நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டுக் காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்த போதும், வறுமையின் பிடியில் இருந்தாலும், அவரது இலட்சிய வாழ்க்கையில் பங்கேற்று ஆக்கமும், ஊக்கமும் அளித்தவர் ரஞ்சிதம் அம்மாள்.
பொதுஉடைமை கொள்கைக்காக வாழ்ந்த இலட்சிய தம்பதிகளான ஆர்.நல்லகண்ணு-ரஞ்சிதம் அம்மாள் வாழ்க்கை இன்று பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
இழப்புகளுக்கு அஞ்சாமல் கொள்கை வழியில் உறுதியோடு மக்கள் போராட்டங்களில் முன்னிற்கின்ற நல்லகண்ணு அவர்கள், மனைவியை இழந்ததால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருப்பார். அன்னாரது துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.
திருமதி ரஞ்சிதம் அம்மாள் அவர்கள் மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னார் ஆன்மா சாந்தியடைய இயறகையை வேண்டுகிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment