தமிழினத்தை அதன் வாழ்வாதாரங்களை காக்க தினமும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டு தன் வாழ்வையே தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் அற்ப்பணித்து கடந்த 52 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மதிமுக இணையதள அணி வேங்கைகளை சந்திக்க ஆவல் கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
இணையத்தில் எதிராளிகளை வியூகம் அமைத்து எப்படி பதிலடி கொடுப்பது போன்றவைகளையும் கலந்துரையாடலாம். தலைவர் வைகோ அவர்கள் இணையதள அணி வேங்கைகளுடன் மனம் திறந்து பேச உள்ளார்.
ஓமன் இணையதள அணி சார்பிலும் விடுமுறைக்காக தாயகம் வந்திருக்கிற இணையதள வேங்கைகள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
எனவே அனைத்து நாடுகளிலும் வாழும் இணையதள அணி வேங்கைகள் வாய்ப்பிருந்தால் இந்த அதிமுக்கியமான நிகழ்வை சிறப்பிக்க சிரமம் பார்க்காமல் கலந்துகொள்ளுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது பல நாடுகளில் வாழும் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கவும் ஒரு வாய்ப்பாகவும் அமையுமென்பதால், உங்களை சந்திக்க ஆவலாய் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.
நாள்: 27.12.2016 செவ்வாய்க்கிழமை
இடம்: சிராஜ் மஹால் - சென்னை எழும்பூர் இரயில் நிலையம் எதிரில்
நேரம்: காலை 10 மணி
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment