திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலமில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மு.கருணாநிதியை அரசியல் நாகரீகம் கருதி 2016 டிசம்பர் 17ஆம் தேதி பார்க்க சென்றார்.
அதற்கு முன்னால் மு.கருணாநிதி அவர்கள் மகள் கனிமொழியிடம் தொடர்புகொண்டு கலைஞரை பார்க்க விரும்புகிறேன் என்றூ கேட்டு அவர்கள் வாருங்கள் என்பதற்கு பின்னரே சென்றிருக்கிறார் வைகோ.
இந்த விடயம் அனைத்து திமுகவினருக்கும் 1 மணி நேரத்திற்கு முன்னரே தெரிந்திருக்கிறது. இதனால் முக ஸ்டாலினின் திமுக வரலாறு தெரியாத கூலியாட்கள் வைகோ அவர்கள் வரும் போது கற்களை வீடியும், செருப்பை காட்டியும், கூச்சலிட்டும் வழி மறித்தனர்.
இதை பார்த்த வைகோ அவர்கள், தன்னால் எந்த விதமான கலவரமும் வந்துவிட கூடாது என மு.கருணாநிதியை பார்க்காமல் திரும்பி சென்று விட்டார்.
இது திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் கூலியாட்கள் அனைத்து தாக்குதலுக்கான தளவாடங்களுடன் இருந்தனர். இது முக ஸ்டாலிலின் ஏவப்பட்ட கூலியாட்களாகவே இருக்க முடியும். ஏற்கனவே தன் இடத்தை வைகோ பிடித்து விட கூடாதென கட்டம் கட்டி வைகோவை நீக்கியதை போல இப்போது வைகோவின் மீதானை தாக்குதலை நிறைவேற்ற ஸ்டாலின் துடிப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
மேலும் இது போன்ற வன்மஙள் தொடருமாயின் மறுமலர்ச்சி திமு கழக கண்மணிகள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள் எனவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் எச்சரிக்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment