Sunday, June 11, 2023

பொதுக்குழு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன்..!

ஜூன் 14 ம் தேதி கழகத்தின் 29 வது பொதுக்குழு சென்னையில் நடைபெறுகிறது.

நேற்று (10.06.2023) மாவட்ட செயலாளர்கள் வட சென்னை கிழக்கு சு. ஜீவன், தென் சென்னை மேற்கு ப. சுப்பிரமணி, கழக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரியக்குமார், மேலாளர் ருத்ரன் ஆகியோருடன் சென்று பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை பார்வையிட்டு, மண்டபத்தின் மேடை அமைப்பு, ஒலி அமைப்பு மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வருகை தரும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தேவயான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேலும் செய்யப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன்.
  
முன்னதாக நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு நேரடியாக வருகை தந்து நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு சென்றார்கள்.
  
உடன் அண்ணாநகர் பகுதி செயலாளர் இராம. அழகேசன், கொளத்தூர் பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி. ஞானம், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், வில்லிவாக்கம் பகுதி செயலாளர் டில்லி பாபு, மாவட்ட அவைத் தலைவர் க. இளவழகன், மாவட்ட துணை செயலாளர் கே.எஸ்.ஹரி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.குமார், மாநில வெளியீட்டு அணி துணை செயலாளர் விக்டர், வட்ட செயலாளர்கள் ராஜி, ஜி.தேவராஜ், காண்டீபன், பகுதி துணை செயலாளர் கல்யாண், பகுதி இளைஞரணி துணை செயலாளர் மாரி, வட்ட துணை செயலாளர் ஆல்பர்ட் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.06.2023

No comments:

Post a Comment