மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. அயல்நாட்டில் முதல் முறையாக வளைகுடா நாடான கத்தாரில் மதிமுக வின் முதன்மை செயலாளர் துரை வைகோ அவர்கள் தலைமையில் 17-06-2023 அன்று திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சாவித்திரி பாய் பூலே பல்கலைகழகம் மற்றும் டிபிஎஸ் கல்வி குழுமத்தின் துணை தலைவர் திரு.யாசிர் நையினார் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை மதிமுக வின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் மற்றும் கத்தார் தமிழர் மறுமலர்ச்சி பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்வில் திமுக, விசிக, பாமக, மனித நேய கலாச்சார பேரவை, மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கத்தார் வாழ் தமிழர்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகத்துடன் ஆவணப்படத்தை கண்டு ரசித்தனர்.
No comments:
Post a Comment