ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெள்ளிக்கிழமை பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது,” என்று கூறி இருக்கிறார்.
தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.06.2023
No comments:
Post a Comment