மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தலைமை கழகமான தாயகத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர் என் ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று 20-06-2023 ல் தொடங்கியது.
இந்த தொடக்க விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில், கழக முதன்மை செயலாளர் துரை வைகோ அவர்கள் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் பங்கேற்று முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment