Friday, May 11, 2018

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ருசைல் ரவுண்டானா அருகில் உள்ள சிம்பொனி டைன் இன் ல் வைத்து 11-05-2018 மாலை 3 மணி அளவில் நடந்தது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை அவை தலைவர் ராஜாராம் அவர்கள் தலைமை வகித்தார். செயலாளர் மறுமலர்ச்சி மைக்கேல், பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் எல்லப்பன் அவர்கள் தொகுத்து வழங்க, முருகானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் குழந்தை வேல் அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் லோகோ வெளியிடப்பட்டது. மேலும் லோகோ பொறித்த டிசர்ட்டும் அறிமுகப்படுத்தி கழக கண்மணிகளுக்கு வழங்கப்பட்டது.

நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று தன்னையே பொசுக்கிய முதல் களபலி சிவகாசி நகர இளைஞரணி துணை செயலாளர் சிவகாசி இரவி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், GST, NEET ரத்து செய்ய வேண்டும் என தன்னை பலிகொடுத்த தலைவர் வைகோ அவர்களிம் துணைவியாரின் அண்ணன் ராமானுஜம் அவர்களின் புதல்வன் சரவண சுரேஷ், பொம்மை விற்று பிளைப்பை நடத்திய ஈரோடு தர்மலிங்கள் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று எழுதி வைத்துவிட்டு தன்னை தீயிட்டு அழித்திக்கொண்டார். அரியலூர் கரையான் குறுச்சி மணிகண்டன், தலைவர் மேல் பிரியமானவர், எல்லா கூட்டத்திற்கும் கலந்துகொள்பவர், தீவிர மதிமுக ஆதரவாளர். இவர் தலைவர் வைகோ அவர்களை இழிசொற்களால் பேசுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் நடு இரவு வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் இரவு தன்னை தீயிட்டு பலியானார். தமிழகத்தை காக்க இப்படியாக தன்னை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி ஒரு நிமிடம் மெளனம் கடைபிடிக்கப்பட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைவர் வைகோ அவர்கள் அலைபேசி வாயிலாக வாழ்த்துரை வழங்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் மூலமாக நாம் மட்டுமே வழக்கு தொடர்ந்திருந்து அதில் நானே வாதாடினேன். இப்போது ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதில்லை என செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்கு முழு காரணமும் மதிமுக மட்டுமே. மேலும் எர்ணா குளத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் தந்தை உடலை மூன்று பேர் தூக்கு கயிறை அறுத்த நீதிபதி சதாசிவம் அவர்கள் இப்போது கேரளா ஆளுநராக இருக்கும்பட்சத்தில் அவரிடம் பேசி தமிழகத்திறு கொண்டு வர செய்தது வைகோதான். ஆனால் நான் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் பேசினேன் மாணவனி தந்தை உடல் தமிழகம் வந்ததற்கு நன்றி தெரிவித்தேன் என தன்னால்தான் நடந்தது என கூறும் ஏமாற்று பேர்வழியான கமல்ஹாசனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சிவாஜிக்கு பிறகு நல்ல நடிகர். ஆனால் நல்ல மனிதரல்ல. என்று பேசினார். மேலும் அங்கு நாட்டு சட்ட திட்டத்தின் படி நடந்து, பொருள் ஈட்ட வந்திருக்கும் நீங்கள் உங்கள் தந்தை தாய் குடும்பத்தை கவனியுங்கள் எனவும் வாழ்த்தி பேசினார்.

மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் பேசும்போது கழக வரலாற்றையும், சாதனைகளையும், மக்களுக்கு இன்னல் நேர்ந்தால் நமது நற்செயல்களையும் தமிழகத்தை எப்படியாக காத்துக்கொண்டிருக்கிறோம் என விரிவாக பேசினார்கள்.

இதில் கழகத்தின் ஆக்க பணிகள், 24 ஆண்டுகள் கழகம் செய்த சாதனைகள், ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செய்ய வேண்டிய களபணிகளை பற்றி அவை தலைவர் ராஜாராம், செயலாளர் மறுமலர்ச்சி மைக்கேல், பொருளாளர் ராஜகுரு, செயற்குழு உறுப்பினர்களான, கிருஷ்ணகுமார், எல்லப்பன், பேராசிரியர் குழந்தைவேல், துணை செயலாளர் வரதராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்.


பாலசுப்ரமணியம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். 40 க்கும் மேற்பட்ட ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட மதிமுக வெள்ளி விழா நிகழ்வு ஓமனில் சிறப்பாக நடைபெற்றது.


தீர்மானம்:


1. தொண்டர்களின் தியாகத்தால் உருவான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 24 ஆண்டுளை கடந்து 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவாக கொண்டாடுகிற இந்த நேரத்தில், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், உண்மையாக உழைத்து தலைவர் வைகோ அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் களப்பணியாற்றி கழகத்தை கட்டி காத்துக்கொண்டிருக்கிற கழகத்தின் உயர் நிலை முதல் கடை நிலை வரையுள்ள கழக கண்மணிகளுக்கு ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறது.


2. நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தில், தலைவர் வைகோ அவர்களுடன் மதுரை முதல் தேனி வரை மழையிலும், வெயிலிலும் நடந்து வந்து நியூட்ரினோ நாசகேட்டை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கழக கண்மணிகளுக்கும், தலைவர் வைகோ அவர்களுக்கும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.


3. நியூட்ரினோ தடை கோரியும், காவிரி மேலாண்மை வாரியம்மைக்கவும், GST, NEET ரத்து செய்யவும் களப்பலியான சிவகாசி ரவி, சரவண சுரேஷ், ஈரோடு தர்மலிங்கம், அரியலூர் மணிகண்டன் ஆகியோர் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆறுதலையும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை தெரிவித்துக்கொள்கிறது.



4. கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நாசகார தாமிர நச்சாலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், மக்கள் மன்றத்தில் நடைபயணம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தொடந்து களத்தில் நின்று ஸ்டெர்லைட்டை அகற்ற போராடிக்கொண்டிருக்கும் அனைத்து கழக கண்மணிகளுக்கும், பல்வேறு குழுக்களாக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூத்துக்குடி மாவட்டமே அழியும் விதத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும் தாமிர ஸ்டெர்லைட் நச்சாலையை உடனே மூடி மக்களின் உயிர்களை காக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை வலியுறுத்துகிறது.


5. 2018 ஏப்ரல் மாதத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தில், தலைவர் வைகோ அவர்கள்பிரச்சாரம் செய்யும் போது கவீசியும், கழக கண்மணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினருக்கு ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

6. கல்வியில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில். NEET தேர்வு எழுத போதுமான நீட் தெர்வு மையங்களை அமைக்காமல், தேர்வு எழுதும் மாணவர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அகதிகளாக அலையவிட்டு மாணவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனஉளைச்சலை ஏற்ப்படுத்திய CBSE தேர்வு வாரியத்திற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, NEET தேர்வை ரத்து செய்து மாநில அளவில் மதிப்பெண் அடிப்படையில் முன்பு இருந்ததை போல மருத்துவ சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை வலியுறுத்துகிறது.

7. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பை கண்டபோதும், சிறிதளவும் செவி சாய்க்காது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்த மத்திய அரசை கண்டிப்பதோடு, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க மத்திய அரசு குழுவை நியமித்து வாரியம் அமைக்க வேண்டுமெனவும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை கேட்டுகொள்கிறது.

8. மதிமுக பொதுச் செயலாளர், தலைவர் வைகோ அவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக, ஹைட்ரோகார்பன் திட்டத்தை நெடுவாசலில் ஜெம் நிறுவனம் கைவிட்டது மதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் அந்த வழக்கிற்கு வாதாடிய தலைவர் வைகோ அவர்களின் பெயரை வெளியிடாமல் ஊடகங்கள் மறைத்ததற்கு ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை வருந்துகிறது.


9. காவிரி தொடர்பாக மக்களுக்கு புரிதல் ஏற்பட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை நடைமுறை படுத்துவதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டுமென்று காவிரி டெல்டா பகுதிகளில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு, களத்தில் ஒத்துளைப்பு கொடுத்துக்கொண்டிருக்கும் தோழமை கட்சிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
11-05-2018

No comments:

Post a Comment