தமிழகம் காக்க உயிர் நீத்த தியாகிகள் படம் திறந்து வீர வணக்கம் செலுத்திய தலைவர்கள்!
நியூட்ரினோ எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஜிஎஸ்டி அகற்றுதல், ஹைட்ரோகார்பன் அகற்றுதல் போன்ற திட்டங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து தன்னுயிரை மாய்த்தால் புரட்சி வெடிக்காதா என்ற ஏக்கத்தில் தன்னை தீ-க்கு இரையாக்கினார்கள் சிவகாசி ரவி, சரவண சுரேஷ், ஈரோடு தர்மலிங்கம், மணிகண்டன் ஆகியோர்.
அவரது படங்களை சென்னை சிராஜ் மாஹாலில் 25-05-2018 மாலை ரம்ஜான் நோன்பு முடிந்ததும் திறந்து வைத்தார்கள்.
அண்ணன் சிவகாசி ரவி அவர்களின் திரு உருவப்படத்தை திரு.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அண்ணன் விருதுநகர் சரவண சுரேஷ் அவர்களின் திரு உருவ படத்தை திரு.தங்கபாலு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
தர்மலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோரது திரு உருவ படங்களையும் தலைவர்கள் திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த பட்டது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment