மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில், ஈழபோரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்கு 17-05-2018 மாலை 5.00 மணி அளவில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன், தலைவர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டார்கள். ஏராளமான தமிழீழ உணர்வாளர்களும் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திவிட்டு, தாயகத்தில் உள்ள அரங்கில் உரை நிகழ்த்தினார்கள்.
அதில் பேசிய காசி அனந்தன் அவர்கள், ஈழத்தில் எம்ஜிஆர் சிலை இருப்பது போல, சுதந்திர தமிழீழத்தில் இருக்கபோவது ஒன்று நெடுமாறன் சிலை, மற்றொன்று வைகோ சிலையாகதான் இருக்கும் என்று பேசினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment